Wednesday, April 15, 2009

கவிதை என்னானது..?

இரவு எழுதிய கவிதை நிலவானது...
ராவோடு ராவாக அது களவானது.

கனவு எழுதிய கவிதை கானலானது...
உறக்கம் தெளிந்து எழுந்தால் அது தூள் தூளானது.

விரல்கள் எழுதிய கவிதை அட்சரமானது...
சந்தம் என்னும் நூலில் கட்டிய பூச்சரமானது.

கண்கள் எழுதிய கவிதை காட்சிகளானது...
உண்மை என்று நிருபிக்க அதுவே சாட்சியானது.

தென்றல் எழுதிய கவிதை தீண்டி போனது...
பெயர் கேட்பதர்க்கு முன்னறே ஓடி மறைந்து போனது.

இயற்கை எழுதிய கவிதை அழகின் சொப்பனமானது...
செயற்கையின் கையில் அக பட்டு அழுக்கான சிற்பமானது.

காதல் எழுதிய கவிதை இரு இதயங்க்களுக்கு தூதானது...
தன்னையே மறக்க செய்யும் மதுவானது.

No comments: