Monday, February 21, 2011

கவிதையோடு என் வாழ்க்கை

பூக்களைப் பற்றி பாமாலை தொடுக்க...
பூஞ்சோலையாகவே மாறியிருக்கிறேன்.

கொட்டும் மழையை ஏட்டில் நனைக்க...
பொட்டல் வெளியில் சொட்டச் சொட்ட நனைந்திருக்கிறேன்.

குழந்தையின் குறும்பை எய்தேழும்ப....
திரும்ப மழலை பருவத்திற்கே சென்றிருக்கிறேன்.

மேகத்தின் வசீகரத்தை பிரசுரிக்க...
மேகத்தில் கொஞ்சம் நாள் தங்கியிருக்கிறேன்.

போர் கொடுமைகளை களம் இறக்க...
போர்க்கைதியாகவே விளங்கிட்டிருக்கிறேன்.

ஒரு கவிஞனைப் பற்றி கதைக்க...
அவனுக்குள் கூடு விட்டு கூடு பாய்ந்திருக்கிறேன்.

காதலைப் பற்றி கவி படைக்க...
காதலனாகவும்,,,
சில சமயங்களில் காதலியாகவும்,,,
கதாப்பாத்திரம் ஏந்தியிருக்கிறேன்.

என் வாழ்க்கையின் பெரும் பகுதி நான் கவிஞனாகவே வாழ்ந்திருக்கிறேன்

தமிழ் பேசு தங்கக் காசு

தமிழ் பேசு தங்கக் காசு...
காசு கொடுத்தால் தான் தமிழுக்கே மவுசு .
இன்னும் எத்தனை காலமோ...
தமிழின் ஆயிசு..?
இந்த அவல நிலை,,,
தமிழன் தமிழுக்கு தந்தப் பரிசு.