Wednesday, March 2, 2011

சுயமிழந்த சுயம்பு....

அழுத்துப் போனது வாழ்க்கை...
களைத்துப் போனது எனது கால் கை...
கிடைத்ததென்னவோ,,,
அவநம்பிக்கை.

என் கால்களுக்கு நானே ஓடக் கற்று கொடுத்துக் கொண்டிருக்கிறேன்...
என் நாவுக்கு நானே பேசக் கற்றுக் கொண்டிருக்கிறேன்...
தானாய் எதுவும் செயல்படவில்லை,,,
சுயமாய் யோசிக்கவே...இன்று யோசிக்கிறேன்.

சீர்திருத்தம் செய்ய எண்ணினேன்...
வருத்தம் தான் மிஞ்சியது.
பொருத்தம் இல்லாத இந்தப் பொறுப்போடு,,,
யுத்தம் செய்ய இனி மனம் அஞ்சியது.

போனால் போகட்டும்...
குற்றம் குறைகள் எனக்கே சேரட்டும்...
சுற்றம் எனது கண்ணீரின் உஷ்ணத்தில் குளிர் காயட்டும்.
பரவாயில்லை,,,
நான் படும் வேதனைகள் வேந்தனுக்காவது தெரியட்டும்.

நாளொன்றுக்கு வாசகம் ஒன்று....

ஆயிரம் பேர் உன்னை தூற்றுவான்...
அவனை விட்டு விடு.
ஒருவன் உன்னை போற்றுவான்...
அவனுக்கு கை கொடு.

வணக்கம்

வணக்கம்...
வணக்கம்...
வணக்கம்...
வணக்கம் என்ற வார்த்தையை சொன்னாலே,,,
வாய் மணக்கும்.

பருவங்கள் மாறும் போது...
வழக்கமாய் நாம் மாற்றி உச்சரிப்பது,,,
காலை வணக்கம்...
மாலை வணக்கம்...
இரவு வணக்கம்...
என்ற வேளை வணக்கம்.

சபை முன்னிலையில் ஆர்வமாய் அமர்ந்திருக்கும் அவையினருக்கு...
அள்ளி இறைப்பது அவை வணக்கம்.

ஆசானாக நாம் ஏற்றுக் கொண்ட ஒருவருக்கு செலுத்துவது...
குரு வணக்கம்.

முதல் சந்திப்பில் அறிமுகம் ஆகும் போது...
கொஞ்சம் நம்பிக்கையோடும்,,,
கொஞ்சம் தயக்கத்தொடும்,,,
பரிமாறிக் கொள்வது...
அறிமுக வணக்கம்.

இம்மையில் நம்மை சுமந்து கொண்டிருக்கும் கடவுளுக்கு...
இறை வணக்கம்.

இப்படி வித விதமாய் வணக்கம்....
வணக்கம் வைத்துக் கொள்ள ஏனோ நமக்கு தயக்கம்..?
வணக்கம் சொல்வதை வழக்கமாக்கிக் கொள்வோம்,,,
அது மனிதனுக்கு மட்டுமே வாய்த்த அற்புத பழக்கம்.

நாளொன்றுக்கு வாசகம் ஒன்று....

முள் என்று விலகிப் போவது வீரமில்லை...
அதோடு மோதிப் மோதிப் பார்ப்பது தான் வீரம்.

காதல் விளக்கியது இலக்கை

வர வர இனிக்குது வாழ்க்கை...
இனம் புரியாத இன்பங்கள் வந்து நுளைக்குது மூக்கை.
குளிரிலும் சிறு சிறு வேர்க்கை...
இப்போது உணர முடிகிறது,,,
காதல் எனும் இலக்கை.

என்னவெல்லாம் ஆக்கினாய்...

சில காலமாய் என்னை சிலையாக்கினாய்...
சில்லரையாக்கி என்னை செலவாக்கினாய்.
மலையோரத்தில் என்னை மரமாக்கினாய்...
கடலோரத்தில் கரையும் கரையாக்கினாய்.