Tuesday, March 22, 2011

சிறுக சிறுக சிறுகதை...எனக்குள் சிறகு முளைத்துப் பறந்த முதல் கதை.
கவிதை உமிழ்ந்த பேனா கதை சொல்லவும் ஆசைப்பட்டது,,,அதற்காக இந்த விதை. வாசகர்கள் சொல்ல வேண்டும் எனது ஆளுமை என்னவென்பதை.

முதல் முயற்சி...ஆழமான ஆராய்ச்சி...கூடவே சிறு பயிற்சி.

Tuesday, March 15, 2011

வாழ்த்திட வாரீர்


" என் தங்கையின் திருமண அழைப்பிதழுக்காக அட்சரமாக்கிய அழைப்புக் குவியல்கள்"

திருமண நாள் : 04 . 06 . 2011


ஒரு மகன்...
மணமகள் மனம் கவர்ந்த திருமகன்.
ஒரு மகள்...
மணமகன் மனம் கவர்ந்த திருமகள்.
ஒரு நாள்...
சுபமுகூர்த்தம் கூடி வரும் மங்கள நாள்.
ஒரு மேடை...
நவரத்தினங்களால் கூடிய மணமேடை.

ஆதவன் அங்கு...
ஆனந்தமாய் எரியும் அக்கினியாக...
தென்றல் அங்கு...
மந்திரம் ஓதும் புரோகிதராக...
விண்மீன்கள் அங்கு...
மேடை போர்த்திய அலங்கர விளக்குகளாக...
மேகத்தின் இரு கைகள் அங்கு...
மணமக்கள் அமரும் இருக்கைகளாக...
பஞ்சபூதங்கள் – மணமகன் வீட்டார் சார்பாக.
நவகிரகங்கள் – மணமகள் வீட்டார் சார்பாக.

அண்டங்கள் ஆளும் அந்த ஆண்டவனே...
இத்திருமணத்திற்கு சாட்சியாக.

உலகமே ஒன்று திரண்டும் இன்னும் காத்திருக்கிறோம் ஏதற்காக..?
உடனிருக்கும் உறவினர்களே,,,
நட்பு நல்கிய நண்பர்களே,,,
அறிவை அளித்த ஆசான்களே,,,
உங்கள் வருகைக்காக.
வந்து இந்த மணமக்களை மனதார வாழ்த்துவதற்காக.

வாழ்த்திட வாருங்கள்...
விண்ணை விட உயர்ந்தது உங்கள் ஆசிர்வாதங்கள்.

Saturday, March 12, 2011

தசை முழுதும் இசை

ஓர் இன்னிசை இரவு...
அவனும் அவளும்.
இருவராய் இருந்து...இருக்கமாய் இணைந்த இரவு.
அதற்க்கு சாட்சி அந்த நிலவு.

சங்கீதமாய் சங்கமமானது...-மனம்
சந்தித்த இடத்திலேயே சஞ்சலமானது.
குளமாவது,,,
கோத்திரமாவது,,,
காதலுக்கு முன்னே...அனைத்தும் சமமானது.

பல நூறு வையோளின்களின் இசை,,,
சில நூறு குயிலோசை,,,
ஒன்ரினைந்ததே காதலின் தசை.
மெதுவாய் அசை போடச் செய்யும் மனசை.

Wednesday, March 9, 2011

ஊரடங்குச் சட்டம்

உதடுகள் திறந்தப் பின்னும்...

மொழிகள் பிரந்தப் பின்னும்...

இன்னும்...

இன்னும்...

நாவில் ஊரடங்குச் சட்டம் முடிந்தபாடில்லையே.

யார் காரணம்..?

உண்மை சொல்ல தெரியல...
பொய்யும் சொல்ல முடியல...
கர்பமாகிப் பொன இந்த சின்ன இதயத்துக்கு,,,
காரணமுன்னு யாரை சொல்ல..?

Tuesday, March 8, 2011

காதலின் வழி

விழிகள் எங்கே கானோமடி...
வழியில் அதனை தொலைத்தேனடி.
குழிகள் அங்கே இருப்பினும்,,,
விழுந்து எழுந்து நடந்தேனடி.

காதலின் நிர்பந்தம்

விழிகள் எங்கே கானோமடி...
வழியில் அதனை தொலைத்தேனடி.
குழிகள் அங்கே இருப்பினும்,,,
விழுந்து எழுந்து நடந்தேனடி.

நீ எந்த கிரகமடி..?

இதய யந்திரத்தை இயக்கிடும் தலைவி...
நீ எந்த கிரகமடி..?
பகலையும் இரவையும் என் திரைவானத்தில் நிறுத்திவிட்டு,,,
மறைவாய் நிற்பது பாவம்டி.

கோடையில் உனது கோடை

மேகம் திறந்து விட்ட வெள்ளி மழையே...
கோடையில் தெரியும் உனது விலையே.

பணமும் மனமும்

பணத்துக்கு இடம் அழகான பணப்பை...
நல்ல மனதுக்கு இடம் குப்பை.

நான் கடவுள்

காசு இருந்தால் மனிதனுக்கு...
கடவுள் என்ற நினைப்பு.

Monday, March 7, 2011

காதல் கடிதம் கைக்குட்டையானது

காதல் அறியாத பெண்மைக்கு...
காதல் கடிதம் எல்லாம்,,,
கைக்குட்டை தானே.

நட்பை மட்டும் கொச்சைப் படுத்தி விடாதீர்கள்

"பாய் ப்ரெண்ட்"-ஆண் நண்பர்.
காதலன் என்று பொருளாம்.

"கேர்ள் ப்ரெண்ட்"-பெண் தோழி.
காதலி என்று பொருளாம்.

நான் கேட்கிறேன்...
கை கோர்த்துச் செல்லலாமா நண்பர்கள்..?
கட்டி அணைத்துக் கொள்ளலாமா நண்பர்கள்..?
கட்டிலைப் பரிமாறிக் கொள்ளலாமா நண்பர்கள்..?
இது அசிங்கமில்லையா..?-அது
நட்பை கொச்சைப் படுத்தும் வார்த்தை இல்லையா..?
எத்தனையோ வேத வார்த்தைகள் இருக்கிறதே...
பயன்படுத்துங்கள்.
எத்தனையோ கேலி வசனங்கள் இருக்கிறதே...
சொல்லி சொல்லி சிரியுங்கள்.
நட்பை ஏன் உங்கள் கேளிச்சந்தையில்,,,
விலை பொருள் ஆக்குகிரீர்கள்..?
எந்த அகராதியில் கண்டாய்,,,
போய் பாருங்கள்.
அர்த்தம் தெரியாது ஏன் உச்சரிக்கிறோம்,,,
முதலில் அதை நிறுத்துங்கள்.

யாரும் சொல்ல வேண்டாம் காதல் புனிதம் என்று...
யாரும் சொல்ல வேண்டாம் காதலர்கள் புனிதம் என்று...
புனிதம் என்ற சொல்லை,,,
மனிதம் எப்படி வேண்டுமென்றாலும் பயன்படுத்தட்டும்.
ஆனால்,,,
உங்கள் கால்களில் நான் விழுந்து கேட்டுக் கொள்வது ஓன்று...
நட்பை மட்டும் கொச்சைப் படுத்தி விடாதீர்கள் என்று.

Sunday, March 6, 2011

ஒத்தையில ஓர் ஓலை


ரோசாவே...
என் ராசாவ பார்த்தாயா..?
தோ வரேன்னு போனவக...
தகவல் ஒன்னும் இல்லையே,,,
கண்டுப் பிடித்துச் சொல்வாய..?

செத்த மரத்த போல...
ஒத்தையில இந்த ஓலை.-மாமா நீ
ஏன் போகும் இடம் சொல்லல...?
நீ வருவேன்னு ஒரு நம்பிக்கை,,,
அதுனாலதான் இன்னும் சாகல.

ஆய்யனாறு சாமி...-
அவக எங்க இருக்காருன்னு கொஞ்சம் காமி.
சூடம் வாங்கி தந்தேன்,,,
ஜடமாய் என்னை நிக்க வெச்சுருக்கே.
விளக்கேத்தி வெச்சேன்,,,
என் விளக்க அணைச்சுப் புட்ட.
வேற என்னதான் உனக்கு வேணும் சொல்லு...செய்யுறேன்.
அவகள என் முன்ன காட்டுறேன்னு சொல்லு,,,
உயிரையும் உனக்கு பலி கொடுக்குறேன்.

முகவரி தாருங்கள்


புதிதாய் பிறந்த மழலைகள் நாங்கள்...
வேரின்றி முளைத்த பயிர்கள் நாங்கள்...
தாய் தந்தை பாசம் அறியாத பேதைகள் நாங்கள்...
சொல்லுங்கள்...
சொல்லுங்கள்...
எதிரியா நாங்கள்..?


பழிச் சொல் தாங்கும் பாறைகள் நாங்கள்...
உறவின்றி வாழும் உயிர்கள் நாங்கள்...
நீதிக் கூண்டில் நிறுத்தப்பட்ட குற்றவாளிகள் நாங்கள்...
தாருங்கள்...
தாருங்கள்...
முகவரி தாருங்கள்.

கள்ளிக்காட்டு சங்கதி


புழுதிக் காட்டில் எழுதி...-பிரம்மன்
மறதியில் விட்டுட்டுப் போன பிரதி,,,-அவள்
தான் பால் நிலவின் பதுக்கப் பட்ட பின் பகுதி.
சுருதி கலையாமல்,,,
ஜதி குலையாமல்,,,
நேர்த்தியாய் நெய்யப்பட்ட கள்ளிக்காட்டு சங்கதி.

காதல் பரிசு

காதல் என்ற புது உலகத்தை...
பரிசளித்தவள் நீ தானே..?-அங்கு
கோடை வெயில் கொழுத்தியும்,,,
போர்வை போர்த்தி தூங்குகிறேனே.

இதயம்

நான் அறிந்த இதயத்துக்கு...
என் இதயம் புரியவில்லை.
என்னை அறிந்த இதயத்துக்கு,,,
என் இதயம் இடம் கொடுக்கவில்லை.
இதயம் தான் இங்கு பிரச்சினையா..?
இனி இதயம் எனக்கு தேவையில்லை.

Friday, March 4, 2011

நாவுக்கு நாதியில்லை

தூரம் நின்று கொண்டால்...
அகராதியும்,,,
அகலகவியும்,,,
நாவில் தவழுதே.
அருகில் நின்று கொண்டால்...
"அ" கூட அஞ்சுதே.

உதடுகளைத் தவிர

உன்னில் அத்தனையும் எனக்கு பிடிக்கும்...
உனது உதடுகளைத் தவிர...
அவை என்னைப் பார்க்கும் போதெல்லாம் ,,,
விரதம் ஏற்கிறதே.

நானும்...நீயும்...காதலும்...

உனக்குத் தெரியாமல் நானும்...
எனக்குத் தெரியாமல் நீயும்...
நமக்கே தெரியாமல் நம் காதலும்...
எப்போ முடியும் இந்த கோரம்..?

ஆவலோடு அவள்

ஒற்றை இரவிலே...
ஓராயிரம் கணவுகள்.
அத்தனை கணவுகளும்,,,
ஆவலோடு முடிந்ததே.
அறிகுறி கூட இல்லையே...
நீ வந்து என்னிடம் பேசுவாய் என்று.

Thursday, March 3, 2011

காதலின் நிர்பந்தம்

ஒவ்வொரு இரவும்...-அவளது
ஜீவ கைகள் என் இருதயத்தின் எல்லா அறைகளிலும்,,,
விளக்கேற்றி வைத்தது.

ஒவ்வொரு கோடையிலும்...-அவளது
ஆன்மீக அணைப்புகள் எனது பாலைவனம் எங்கும்,,,
நைல் நதியை நகர்த்தி வந்தது.

இலையுதிர் கால இம்சைகள்...-அவளது
நினைவுகளால்,,,
ஓராயிரம் காலத்து வசந்தத்தை ஆசிர்வதித்தது.

சற்று நேரம் அவளை நினைக்காமல் போனால் கூட...-என்
நிமிட நேரங்கள்,,,
நிஜங்களை நிராகரிக்கிறது.

Wednesday, March 2, 2011

சுயமிழந்த சுயம்பு....

அழுத்துப் போனது வாழ்க்கை...
களைத்துப் போனது எனது கால் கை...
கிடைத்ததென்னவோ,,,
அவநம்பிக்கை.

என் கால்களுக்கு நானே ஓடக் கற்று கொடுத்துக் கொண்டிருக்கிறேன்...
என் நாவுக்கு நானே பேசக் கற்றுக் கொண்டிருக்கிறேன்...
தானாய் எதுவும் செயல்படவில்லை,,,
சுயமாய் யோசிக்கவே...இன்று யோசிக்கிறேன்.

சீர்திருத்தம் செய்ய எண்ணினேன்...
வருத்தம் தான் மிஞ்சியது.
பொருத்தம் இல்லாத இந்தப் பொறுப்போடு,,,
யுத்தம் செய்ய இனி மனம் அஞ்சியது.

போனால் போகட்டும்...
குற்றம் குறைகள் எனக்கே சேரட்டும்...
சுற்றம் எனது கண்ணீரின் உஷ்ணத்தில் குளிர் காயட்டும்.
பரவாயில்லை,,,
நான் படும் வேதனைகள் வேந்தனுக்காவது தெரியட்டும்.

நாளொன்றுக்கு வாசகம் ஒன்று....

ஆயிரம் பேர் உன்னை தூற்றுவான்...
அவனை விட்டு விடு.
ஒருவன் உன்னை போற்றுவான்...
அவனுக்கு கை கொடு.

வணக்கம்

வணக்கம்...
வணக்கம்...
வணக்கம்...
வணக்கம் என்ற வார்த்தையை சொன்னாலே,,,
வாய் மணக்கும்.

பருவங்கள் மாறும் போது...
வழக்கமாய் நாம் மாற்றி உச்சரிப்பது,,,
காலை வணக்கம்...
மாலை வணக்கம்...
இரவு வணக்கம்...
என்ற வேளை வணக்கம்.

சபை முன்னிலையில் ஆர்வமாய் அமர்ந்திருக்கும் அவையினருக்கு...
அள்ளி இறைப்பது அவை வணக்கம்.

ஆசானாக நாம் ஏற்றுக் கொண்ட ஒருவருக்கு செலுத்துவது...
குரு வணக்கம்.

முதல் சந்திப்பில் அறிமுகம் ஆகும் போது...
கொஞ்சம் நம்பிக்கையோடும்,,,
கொஞ்சம் தயக்கத்தொடும்,,,
பரிமாறிக் கொள்வது...
அறிமுக வணக்கம்.

இம்மையில் நம்மை சுமந்து கொண்டிருக்கும் கடவுளுக்கு...
இறை வணக்கம்.

இப்படி வித விதமாய் வணக்கம்....
வணக்கம் வைத்துக் கொள்ள ஏனோ நமக்கு தயக்கம்..?
வணக்கம் சொல்வதை வழக்கமாக்கிக் கொள்வோம்,,,
அது மனிதனுக்கு மட்டுமே வாய்த்த அற்புத பழக்கம்.

நாளொன்றுக்கு வாசகம் ஒன்று....

முள் என்று விலகிப் போவது வீரமில்லை...
அதோடு மோதிப் மோதிப் பார்ப்பது தான் வீரம்.

காதல் விளக்கியது இலக்கை

வர வர இனிக்குது வாழ்க்கை...
இனம் புரியாத இன்பங்கள் வந்து நுளைக்குது மூக்கை.
குளிரிலும் சிறு சிறு வேர்க்கை...
இப்போது உணர முடிகிறது,,,
காதல் எனும் இலக்கை.

என்னவெல்லாம் ஆக்கினாய்...

சில காலமாய் என்னை சிலையாக்கினாய்...
சில்லரையாக்கி என்னை செலவாக்கினாய்.
மலையோரத்தில் என்னை மரமாக்கினாய்...
கடலோரத்தில் கரையும் கரையாக்கினாய்.

Tuesday, March 1, 2011

தன்னை மறந்து இதயம்

விண்ணில் திரிந்தக் காற்று...
ஏன் என்னைக் கடந்ததோ..?
ஏன் என் கண்ணை கடந்ததோ..?
தன்னை மறந்து இதயம்,,,
இயங்க மறுப்பதோ.