Sunday, March 6, 2011

ஒத்தையில ஓர் ஓலை


ரோசாவே...
என் ராசாவ பார்த்தாயா..?
தோ வரேன்னு போனவக...
தகவல் ஒன்னும் இல்லையே,,,
கண்டுப் பிடித்துச் சொல்வாய..?

செத்த மரத்த போல...
ஒத்தையில இந்த ஓலை.-மாமா நீ
ஏன் போகும் இடம் சொல்லல...?
நீ வருவேன்னு ஒரு நம்பிக்கை,,,
அதுனாலதான் இன்னும் சாகல.

ஆய்யனாறு சாமி...-
அவக எங்க இருக்காருன்னு கொஞ்சம் காமி.
சூடம் வாங்கி தந்தேன்,,,
ஜடமாய் என்னை நிக்க வெச்சுருக்கே.
விளக்கேத்தி வெச்சேன்,,,
என் விளக்க அணைச்சுப் புட்ட.
வேற என்னதான் உனக்கு வேணும் சொல்லு...செய்யுறேன்.
அவகள என் முன்ன காட்டுறேன்னு சொல்லு,,,
உயிரையும் உனக்கு பலி கொடுக்குறேன்.

முகவரி தாருங்கள்


புதிதாய் பிறந்த மழலைகள் நாங்கள்...
வேரின்றி முளைத்த பயிர்கள் நாங்கள்...
தாய் தந்தை பாசம் அறியாத பேதைகள் நாங்கள்...
சொல்லுங்கள்...
சொல்லுங்கள்...
எதிரியா நாங்கள்..?


பழிச் சொல் தாங்கும் பாறைகள் நாங்கள்...
உறவின்றி வாழும் உயிர்கள் நாங்கள்...
நீதிக் கூண்டில் நிறுத்தப்பட்ட குற்றவாளிகள் நாங்கள்...
தாருங்கள்...
தாருங்கள்...
முகவரி தாருங்கள்.

கள்ளிக்காட்டு சங்கதி


புழுதிக் காட்டில் எழுதி...-பிரம்மன்
மறதியில் விட்டுட்டுப் போன பிரதி,,,-அவள்
தான் பால் நிலவின் பதுக்கப் பட்ட பின் பகுதி.
சுருதி கலையாமல்,,,
ஜதி குலையாமல்,,,
நேர்த்தியாய் நெய்யப்பட்ட கள்ளிக்காட்டு சங்கதி.

காதல் பரிசு

காதல் என்ற புது உலகத்தை...
பரிசளித்தவள் நீ தானே..?-அங்கு
கோடை வெயில் கொழுத்தியும்,,,
போர்வை போர்த்தி தூங்குகிறேனே.

இதயம்

நான் அறிந்த இதயத்துக்கு...
என் இதயம் புரியவில்லை.
என்னை அறிந்த இதயத்துக்கு,,,
என் இதயம் இடம் கொடுக்கவில்லை.
இதயம் தான் இங்கு பிரச்சினையா..?
இனி இதயம் எனக்கு தேவையில்லை.