Sunday, February 6, 2011

பெண்மையும் நீரும்

பெண்மையும் நீரும் ஒன்றாமோ...
தன்மை அறிந்தவன் கிடையாதே.
ஆயிரம் கவிஞர்கள் வந்தாலும்,,,
உண்மை நிலவரம் தெரியலையே


நானா..? நீயா..?

நான்...
நானாக இருந்த போது,,,
நான் என்னையே அறிந்ததில்லை.

நான்...
நீயாக இருக்கு இப்போது,,,
அறிந்து கொண்டேன்...
காதல் என்னையும் விட்டு வைக்கவில்லை.

சொந்தவனம்

நந்தவனமே...
நந்தவனமே...
என் சொந்த வனம் ஆவாயா..?
என் கவிதை சந்தம் வரைக்கும் வந்தவளே,,,

என் சொந்தம் என ஆவாயா..?
என் சிந்தை கூட்டின் சந்தையிலே...
கூவி கூவி விந்தை விளைவித்தது போதும்,,,
மனப் பந்தியில் குடி வருவாயா..

வந்த வழி எந்த வழி..?

கண்கள் வழி...வந்த ஒளி...என்ன ஒளியோ..?
நிலவொளியோ..?
மின்னல் ஒளியோ...?
அந்த ஜீவ ஒளி...

வந்த வழி....

தேடிச் சென்ற எனது விழி,,,

மறந்து போனது அது வந்த வழி.

நிலவுக்கு நிகர்

அவள் விழிகளை திறந்துப் பார்த்தேன்...

அங்கே தாமரை பூக்களின் தோப்பு.

அவள் உதடுகளை உற்றுப் பார்த்தேன்...
தேனீக்களின் குடியிருப்பு.
கூந்தலைக் களைத்துப் பார்த்தேன்...
பாபிலோனின் தோட்ட அமைப்பு.

வானத்து வெண்ணிலவே,,,
உனக்கு என்ன நினைப்பு..?
அவள் உன்னை விடவும் உயர்ந்த படைப்பு.

காலையை உங்களுக்கு அறிமுகப் படுத்துகிறேன்...

அலாரம் பொறுத்தாமலேயே,,,கூவி எழுப்பும் செவல்.
பறவைகளின் பரவச கீச்சொலி.
உடம்பை உதர வைக்கும் குளிர் தென்றல்.
சூரியன் சுகிக்க,,,வானின் திறப்பு விழா.
சாலை எங்கும் பனித்திரை.

இவை அனைத்தையும் இதயத்தோடு அறிமுகப் படித்திக் கொள்ளுங்கள்.
இன்று என்பது நமக்கு இன்பகரமாய் இருக்கும்


நாளொன்றுக்கு வாசகம் ஒன்று....

உலகிலுள்ள வேதனைகளை எல்லாம் சோதித்துப் பார்,,,
காதலின் சாதனை புரியும்
.

உன் இதயம் மறுக்காது

நான் விழுந்தது...
மீண்டும் உன் கரம் பிடித்து எழுந்தது...
உனக்கு தெரியாமல் இருந்திருக்கலாம்.
உன் இதயத்துக்குத் தெரியாமல் இருந்திருக்காது.
நீ மறுத்தாலும்...
உன் இதயம் அதை மறுக்காது.

நாளொன்றுக்கு வாசகம் ஒன்று....

பார்வைகள் மட்டுமே உண்மையின் கோர்வையை சொல்லும்...

புரியும்

புரியும் மனம் புரியும்....
புரியும் போது அது புரியும்.
காதல் என்பது குழப்பத்தின் கோவில்,,,
புரியும் போது மனம் புன்னகை புரியும்.

நான் எப்படி பாட..?

கம்பனை கூட்டி வந்தேன்...
அவள் விழி அழகைப் பாட.
அவனுக்கே வார்த்தை இல்லையே....
நான் எப்படி பாட..?

நாளொன்றுக்கு வாசகம் ஒன்று....

கடமையை செய்ய கெளரவம் பார்க்காதே.

முயலும், ஆமையும்!

மௌனம் சூழ்ந்த ஒரு காடு….

பல் உயிர்களுக்கு அது தான் வீடு.

சில்லென்ற அந்த சூழலோடு,,,

சொல்ல நாங்கள் வந்தோம் கதையோடு.

மெதுவாய் நகரும் ஓர் ஆமை

எத்தூரம் எனினும்,,,

எண்ணி எண்ணி நடக்கும் பொறுமை.

வேகமாய் விரையும் முயலுக்கு

தான் தான் என்ற தற்பெருமை.

அவ்விரு துருவம் சேரும் பொழுதில்,,,

ஓரு புதுமை.


என்னோடு போட்டி போட,,,

இங்கே ஆளிருக்கா..?

ஓட்டுக்குள்ளே பயந்தொளியும் ஆமையே,,,

ஓடி ஜெயிக்க உனக்கு தில் இருக்கா..?

முயலும் சவால் இட

ஆமையும் சம்மதம் தந்தது,,,

சரிசமமாய் போட்டியிட.

வனவாழ் வாசிகள் கூடின,,,

போட்டியை நோட்டம் இட.


நீதிபதியாய் வானரம்...

ஓட்டம் தொடங்கிய நேரம்,,,

மிருகங்களின் ஆரவாரம்.

உட்சாகமாஇ இருவரும்.


முயலோ

எடுத்த எடுப்பில் ஓட்டம்.

நகர்ந்தது ஆமை மட்டும்.

முன்னேறிய முயலுக்கு களைப்பார திட்டம்

ஆமையை கானோமே,,,,

முயலின் எண்ணம் நிறைவேற்றம்.


களைப்பாரப் போன முயலோ

கண் அயர்ந்து போனதென்ன.

கண் விழித்துப் பார்த்த போது,,,

கணவு கானல் நீராய் கலைந்த்தென்ன.


ஆமை முயலை கடந்தது

வெற்றி கோட்டை நுகர்ந்தது.

துறத்தி சென்றும் பயன் இல்லை,,,

மண்னில் முயல் கவிழ்ந்தது.

ஆனவம் அவிழ்ந்தது.

கதையும் முடிந்தது.


கதையை கேட்டோமே

கதையாய் மட்டும் கேட்டோமே

கருத்தை கொஞ்சம் உரித்து பார்ப்போமே.

ஆனவம் ஆகாது நன்பர்களே

அது அழிவுக்கு விட்டிடும் நம்புங்களே.

தற்பெருமை தகாது நன்பர்களே

உண்மை சொன்னால் கேளுங்களே.




இலக்கணக் காதல்

வல்லினம் நீ...
மெல்லினம் நான்...
இடையினாமாய் காதல் வர...
முடங்கிக் கிடக்கிறேன் கோடையிலே.

பெயர் சொல் கண்ணே...
உன் திருவாயால்,,,
பெயர் சொல் கண்ணே...
எனது உயிரும் மெய்யும் புணரும் ,,,
ஓரிடத்தில் நின்னே.

சுட்டேரிக்குது சுட்டெழுத்து...புனிதப் போருக்கு அயத்தமாகுது ஆயுத எழுத்து...
கேள்விக் கணைகளை பாய்ச்சுதே வினா எழுத்து...
இவை தானோ எனது அன்றாட தலை எழுத்து..?

உயர்தினையா...-நான்
அஃறினையா..?
திணை தெரியாத வினைகளை தாங்கி,,,
பினைப்பிடிக்கப் பட்டிருக்கிறேன்.
இவை யாவும்...
காதல் செய்த செய்வினையா..?

பன்மைகள் ஒருமையாக...
வேற்றுமைகள் ஒற்றுமையாக...
இலக்கணக் காதலுக்கு முற்று என்பது இல்லை,,,
செர்த்தேழுதுவோம் நம் பெயரை ஒன்றாக.

நாளொன்றுக்கு வாசகம் ஒன்று....

பெற்றது வாரைக்கும் பெருமிதம் கொள்வோம்.