Monday, February 28, 2011

இதயக் கோவிலில் திருவிழா

மூச்சு விடும் தாஜ்மஹாலா...?
மூச்சு விட மறந்தேன் உன்னாலா.
பேச்சு வார்த்தை நடத்தும் மின்னலா..?
பேச்சு இழந்து போய் கிடக்கிறேன்,,,
அவள் வருவாளா..?

அங்கம் ஜொலிக்கும் திங்களா..?
தங்கம் பூசிய சிலை கல்லா..?
வில்லங்கம் பிடித்த புல்லாங்குழலா..?- அவள்
உள்ளங்கையில் உலக ரேகைகளா..?
எனது இரவை குடிக்கும் பார்வைகளா..?
நான் அறையப் பட்டது-உன்
இதயம் எனும் சிலுவையிலா..?

ஒரு நாளா..?
இரண்டு நாளா..?-நீ
என் வானை வசீகரிக்கும் பெண்ணிலா.
என்றைக்கு உன்னை கை பிடிக்கிறேனோ..?-அன்று
என் இதயக் கோவிலில் திருவிழா.

நாளொன்றுக்கு வாசகம் ஒன்று....

இருள் என்பது இருந்தால் மட்டுமே...
நிலவு என்பது அழகு.

Saturday, February 26, 2011

உழைப்பே வாழ்வின் தலைப்பு

உறைத்துக் கொண்டே இருப்பவன் உழைப்பவன் இல்லை...
உழைக்காமல் யாரும் உயர்ந்தவன் இல்லை.
உழைப்பை வாழ்வின் தலைப்பாய் பிரகடனப்படுத்து,,,
வியர்வைக்கு சமமான கூலி இல்லை.

Friday, February 25, 2011

காதலை வெறுத்தவன் பேசுகிறேன்

காதலன்களின் காதுகளே...
காதலை வெறுத்தவன் பேசுகிறேன்,,,
கேளுங்கள்.
காதலே வேண்டாம்,,,
காது கொடுத்துக் கேளுங்கள்.
கனவிலிருந்து மீளுங்கள்.
கண் கட்டை கொஞ்சம் அவிளுங்கள்.

ஆண்கள் என்ன ஏமாற்றும் வர்கமா..?
இருக்கலாம்,,,
ஆனால் ஆண்கள் மட்டுமா..?
ஏமாற்றும் பெண்களை காட்டட்டுமா..?
நானும் எமார்ந்தவன் தான்...
ஆதலால் தான் கூறுகிறேன் திட்டவட்டமா.

இது சுயநலம் சூழ்ந்த உலகம்...

உச்சி வெயில் மண்டையை பிளக்கும் போதிலும்,,,-உன் காதல்
அங்கே எச்சிலை கொண்டு சமாளிக்கும்.
பிச்சைக்காரன் ஆகும் நிலை வரைக்கும் கொண்டு செல்லும்,,,-அவள் காதல்
அப்போது அது புலிக்கும்.


இது உணர்ச்சி இல்லாத உலகம்...

உன்னவள் உன்னவில்லை என்றால்...
உன் நா ருசியை வெறுக்கும்.
அவளால் நீ பசியை இருப்பதை அறிந்தால்,,,-அவள்
மனம் ரசிக்கும்.

சுத்தலில் விடும் சித்திரப் பெண்கள்...
ஆயிரமையா.
காதலே பெண்களுக்கு பழிவாங்கும் ஆயுதமையா.
பத்திரமையா...
பத்திரமையா...-இது
எனது கறுப்புச் சரித்திரமையா.

மானசீகமாய் அவளை

அடங்காத காதல் தொடங்கியது...
மௌனம் மனசுக்குள் முடங்கியது.
இது வரை போட்ட ஆட்டமெல்லாம்...
அரை நொடியில்,,,
அடையாளமே இல்லாமல் அடங்கியது.

மனசென்னும் கிடங்கு...
மானசீகமாய் அவளை ஏற்றுக் கொண்டது.
இது தான் முதல் முறை...
மௌனம் எனும் விலாசத்தில்,,,-நான்
தொலைந்து போனது.

காதல் என்பது கடவுளின் பரிமாணம்...
கண்டதும் அவளை கண்டுக்கொண்டேன் நானும்.
காதலே எனது நா சபிக்கும் நாமம்...
எல்லாவற்றிற்கும் அவளே காரணம்.

யாவருக்கும் அங்கே ஓர் இடம் கிடைக்கும்

அமைதி சூழ்ந்த ஒரு காடு....
அது ஆவிகளின் வீடு.
ஒரு சுதந்திர நாடு...
அது தானே சுடு காடு.

செவியை சேதம் செய்யும் இரைச்சல் இல்லை...
ஒற்றுமை குலைக்கும் ஜாதி பேதம் இல்லை...
அரசியல் இங்கே நுழைவது இல்லை.

வீதிச் சண்டை இல்லை...
பட்டானிச்சாவு இல்லை...
அதிகார ஆதிக்கம் இல்லை.

விவாகரத்து இல்லை...
வன்முறை இல்லை...
எதிரி இல்லை.

பெயருக்குத் தான் அது கல் அறை (கல்லறை)...-அது
சுதந்திரத்தின் கருவறை.
வாடகை இல்லாத சொந்தக் கூரை...
அங்கு வாழ்ந்து தான் பார்ப்போமே ஒரே ஒரு முறை.

நடு முதுகு வேர்க்கும் வரை நீடிக்கும் நடுக்கம்...
யாருக்கு தான் அங்குப் போக பிடிக்கும்..?
ஓர் உண்மை...
அங்கு மட்டுமே தனிமையின் சுகம் கிடைக்கும்.
யாவருக்கும் அங்கே ஓர் இடம் கிடைக்கும்.

Thursday, February 24, 2011

காதல் கைதி

நான் ஒரு காதல் கைதி...
அவள் கண்கள் என்பது கை விலங்கு .
தினமும்காலையில் கைதாகி...
மாலையில் விடுதலை ஆவேன்.

Tuesday, February 22, 2011

காரணம் அவள் ஞாபகம்

தழும்பு இல்லாத காயம்...
தாழம் பூவாய் நெஞ்சில்,,,
காதல் எனும் ஒரு மாயம்.
இரும்பு போல் இறுகிக் கிடந்த இதயம்...
திரும்ப திரும்ப உருகி வழிகிறது,,,
காரணம் அவள் ஞாபகம்.

இதயம் நடிக்கிறது...

கொஞ்ச நாளாய் என் விழிகளிக்கு...
வனப்பு கூடுவதை உணர்கிறேன்.
அவளைப் பார்த்த நாளிலிருந்து ...
விட்டு விட்டு துடித்த இதயம்,,,
விடாமல் துடிப்பதை உணர்கிறேன்.

போதை இதழ்

போதை இதழ் குவிக்க...
பேதை தன் இமை விரிக்க ...
பூ வாங்கி வந்த அவள் பூ முகமோ,,,
என் மீது தேன் தெளிக்க.

Monday, February 21, 2011

கவிதையோடு என் வாழ்க்கை

பூக்களைப் பற்றி பாமாலை தொடுக்க...
பூஞ்சோலையாகவே மாறியிருக்கிறேன்.

கொட்டும் மழையை ஏட்டில் நனைக்க...
பொட்டல் வெளியில் சொட்டச் சொட்ட நனைந்திருக்கிறேன்.

குழந்தையின் குறும்பை எய்தேழும்ப....
திரும்ப மழலை பருவத்திற்கே சென்றிருக்கிறேன்.

மேகத்தின் வசீகரத்தை பிரசுரிக்க...
மேகத்தில் கொஞ்சம் நாள் தங்கியிருக்கிறேன்.

போர் கொடுமைகளை களம் இறக்க...
போர்க்கைதியாகவே விளங்கிட்டிருக்கிறேன்.

ஒரு கவிஞனைப் பற்றி கதைக்க...
அவனுக்குள் கூடு விட்டு கூடு பாய்ந்திருக்கிறேன்.

காதலைப் பற்றி கவி படைக்க...
காதலனாகவும்,,,
சில சமயங்களில் காதலியாகவும்,,,
கதாப்பாத்திரம் ஏந்தியிருக்கிறேன்.

என் வாழ்க்கையின் பெரும் பகுதி நான் கவிஞனாகவே வாழ்ந்திருக்கிறேன்

தமிழ் பேசு தங்கக் காசு

தமிழ் பேசு தங்கக் காசு...
காசு கொடுத்தால் தான் தமிழுக்கே மவுசு .
இன்னும் எத்தனை காலமோ...
தமிழின் ஆயிசு..?
இந்த அவல நிலை,,,
தமிழன் தமிழுக்கு தந்தப் பரிசு.

Sunday, February 20, 2011

தமிழ் மொழி நமது தவ மொழி

பெற்றத் தாய் போல் இல்லையா...-உன்
தாய் மொழி.
உனது உதடுகள் மீது உரிமை கொள்ள,,,
அதற்கு வாய்ப்பளி.
ஓர் உன்னத மொழி...
அது தமிழ் மொழி.
தமிழ் பேசும் தமிழன் தான்,,,
இந்த உலகில் அதிர்ஷ்டசாலி.


உனக்காய்...

ஒவ்வொரு நொடியும்...
உன் பெயர் சொல்லி இதயம் துடிக்குதடி.-அந்த
ஒவ்வொரு துடிப்பும்,,,
எனக்காய் அல்ல...உனக்காய் துடிக்குதடி.

பாடு போருளானவள்

எனது பேனா முனை முதல் முறை தலை குனிந்தது...
அவளது அழகான பெயரை எழுதத் தான்.

எனது கண்கள்முதல் முறை பார்வை இழந்தது...
அவளது நிழலில ஒதுங்கிய போது தான்.

எனது கால்கள் முதல் முறை வேர் கொண்டது...
அவளது இருப்பிடம் கடந்த போது தான்.

எனது இருதயம் முதல் முறை துடிக்க மறந்தது...
அவளது திருமுகம் கண்ட போது தான்.

எனது நாட்கள் முதல் முறை புன்னகையில் பூ பூத்தது...
அவளது அருகில் நிற்கும் போது தான்.

எனது கவிதைகள் முதல் முறை கால் முளைத்து நடந்தது...
அவளது பெயரே அதற்கு பாடு பொருள் ஆன போது தான்.

Saturday, February 19, 2011

நாளொன்றுக்கு வாசகம் ஒன்று....

வியர்வை உழைப்பு பிழைப்புக்கு மட்டுமே...
செழிப்புக்கு கிடையாது

எப்போது ஒருவன்,,,

எப்போது ஒருவன்,,,
தான் அடிமை என்பதை உணர்கிறானோ...
அப்போது அவன் முதலாளி ஆகிறான்.

எப்போது ஒருவன்,,,
விடியலை சந்திக்கிரானோ...
அப்போது அவன் உறக்கம் தெளிகிறான்.

எப்போது ஒருவன்,,,
கண்ணீர் விடுகிறானோ...
அப்போது அவன் தன் தப்பை உணர்கிறான்.

எப்போது ஒருவன்,,,
எப்போது ஒருவன் வாய் விட்டு சிரிக்கிறானோ...
அப்போது அவன் வாழ்க்கையில் அர்த்தம் அறிகிறான்.

எப்போது ஒருவன்,,,
நிமிர்ந்து பார்க்கிறானோ...
அப்போது அவன் உயர்வதர்க்கு தயாராகிறான்.

எப்போது ஒருவன்,,,
பொதுநலம் கருதுகிறானோ...
அப்போது அவன் தலைவன் ஆகிறான்.

எப்போது ஒருவன்,,,
தான் வாழ்வது மிருக வாழ்க்கை என்று நினைக்கிறானோ...
அப்போது அவன் மனிதன் ஆகிறான்.

Friday, February 18, 2011

எது நாகரீகம்..?

எது நாகரீகம்..?
புதுமையா...
இல்லை,,,
வாழ்வியல் கூறுகளின் வறுமையா..?
இது என்ன பெருமையா..?
மழைப் பெய்தாலும் மருத்துப் போய் நிற்பதற்கு,,,
நாம் என்ன எருமையா..?

கைக்குட்டை என்பது நாகரீக உடையாம்,,,
நம் இனப் பெண்களுக்கு.
மேல் சட்டை அணிந்தால் போதும் என்ற நாகரீகம...
யார் கற்று கொடுத்தார் நமக்கு..?
அழகு என்பது ஆடை குறைப்பில் இல்லை.
வனப்பு தொடை காண்பிப்பில் இல்லை.
அத்தனையும் நம் அடக்கத்தில் இருக்கு.

மஞ்சள் பூச மணிக்கணக்காகுமா..?
பெண்மைக்கு அழகு அதை விட ஏதம்மா...?
நெற்றியில் திலகம் இட்டால் அது பாரமா..?


பூமுடித்தால் மாது...அவளுக்கு நிகர் எது..?
இன்று,,,
மங்கை கூந்தல் மலர்களை மறந்தது.
தலைவிரி கோலமாய் விரிந்தது.
இப்படியே போனால்,,,
பேய்களுக்கும் பெண்களுக்கும் வேறுபாட்டினை எப்படி தேடுவது..?

சேலையில் எதற்கு சிக்கனம்..?
கண்டவன் பார்க்க ஏனோ,,,
சன்னல் வைக்கணும்..?
உடலை மறைக்க தானே உடைகள்...
பெண்களே,,,
கொஞ்சம் யோசிக்கணும்.

நாகரீகம் என்ற பெயரில் ஆபாச நாடகம் வேண்டாம்.
அயல் நாட்டின் மோகம் அனுசரிக்க வேண்டாம்.
காலம் மாறட்டும்...
கலாச்சாரம் மாற வேண்டாம்...
எக்காலமும் ஏற்கக் கூடியது தான் எங்கள் கலாச்சாரம்.
அது தான் நம்மை அடையாளம் காண்பிக்கும் ஆதாரம்.

அவளுக்கு மட்டுமே...

போனால் இதயம் திரும்பாது...
வேறொரு இதயம் பொருந்தாது.
அவளை தவிர இந்த இதயம்,,,
வேறு யாரையும் விரும்பாது.

நிலையில்லா காதல்

காதலும் கனவும் ஒன்று...
அது கலைந்திடும் நாள் உண்டு.
காதலும் வானிலையும் ஒன்று...
அது நிலையில்லையே இன்று.

Thursday, February 17, 2011

நாளொன்றுக்கு வாசகம் ஒன்று...

தமிழ் இல்லையேல் தமிழன் இல்லை.

நாளொன்றுக்கு வாசகம் ஒன்று...

சொல்பவர் பலர் இருக்கலாம்...வெல்பவர் சிலர் மட்டுமே

நாளொன்றுக்கு வாசகம் ஒன்று....

சோதனை இல்லாமல் சாதனை இல்லை.

Wednesday, February 16, 2011

அக்கறைப் பூக்கள்

காதலுக்கு தேன் தடவும் அவளது சக்கரை வார்த்தைகள்...
என் மீது அக்கறைப் பூக்களை தூவி விட்டுப் போக,,,
அக்கரையில் இருந்த நானோ...
அவள் உயிர் கரையில் வந்து ஒதுங்கினேன்.

நாளொன்றுக்கு வாசகம் ஒன்று....

கடுப்போடு பார்த்தால் கம்பனும் கணக்கு வாத்தியார் தான்.

Monday, February 14, 2011

உயிரையுமா..?

சீண்டி பார்க்கிறாள் எனது சிறுகுடலை...
தீண்டி பார்க்கிறாள் எனது சுண்டு விரலை...
நொண்டி பார்க்கிறாள் எனது நுரையீரலை...
வேண்டி கேட்கிறாள்,,,
மிஞ்சி இருக்கும் எனது உயிரை.

வள்ளுவன்

ஒரு விநோதமான விவசாயி...
காலையில் வயலை உழுவான்.
மாலையில் ஓலையை உழுவான்.
தமிழ் என்று சொல்லிக் கொண்டே எழுவான்.

பிழைப்புக்காக வேலை.
பிறப்புக்காக ஓலை.
உழைப்புக்காக ஊதியம்.
தமிழுக்காக வைத்தியம்

அவனை பேசாத புலவன் இல்லை...
அவனை எழுதாத அறிஞன் இல்லை...
அவனை அறியாத தமிழன் இல்லை...
தமிழுக்கு அவனே தலைச்சம் பிள்ளை.

அன்று அவன் கண்டது...
இன்று அறிவியலும் தோற்றது.
மூன்று அவன் கண்டது...
முப்பாலாய் சுவைக்குது.
கோடி கொடுத்தாலும் ஈடிலா அவன் படைப்பு,,,
அனைத்துலகமும் அண்ணார்ந்து பார்க்குது.

அவன் தந்துவிட்டுப் போனது,,,
அகரங்கள் அல்ல...
மனித குலத்து ஆகாரம்.
அவன் செதுக்கி வைத்துப் போனது,,,
கல்லால் இழைத்த காவியம் அல்ல...
சொல்லால் செதுக்கப் பட்ட ஓவியம்

இரண்டடி கவிஞன்...-அவன்
முன்னோர்களுக்கும் முன்னோடி.
அறிஞனுக்கும் புலவனுக்கும் மேலே ஒரு படி.
தமிழ் தாளம் போடும் அவன் சொற்படி.

கருத்தாழமிக்க கருமி...-அவன்
படைப்புகள் இலக்கியம் மட்டும் அல்ல.
வாழ்வியல் வாக்கியம்.
வெட்டிக்கு எழுதிய வாசகம் அல்ல...
பொக்கிஷம்..

Sunday, February 13, 2011

காதல் வளர்ச்சி

காதல் கடிதங்களுக்கு வேலை இல்லை போலும்...
கண்கள் வழியே அஞ்சல் அனுப்பும் காலம்.
இந்தப் பெருமை எல்லாம்,,,
காதல் தேவனே...உம்மையே சாரும்.

காதலர் தினம்

இந்த தினம்...
காதலுக்கு உகந்த தினம்.
காதலர்களுக்கு சொந்தமான தினம்.

இந்த தினம்...
இதயம் பூவாய் விரியும் தினம்.
கால்கள் இறக்கை விரித்து திரியும் தினம்.

இந்த தினம்...
மனசு மனசும் சேர்ந்த தினம்.
ரோஜா பூக்கள் சந்தையில் தீர்ந்த தினம்.

இந்த தினம்...
அன்புக்கு அடிமையான தினம்.
இன்பத்துக்கு உரிமையான தினம்.

அந்த தினம்...
அழகிய தினம்.
அற்புத தினம்.
காதலுக்கு நன்றி சொல்லும் ஒரு புனித தினம்.

அதுவே காதலர் தினம்.
நிலவும் கொண்டாடச் சென்று விட்டது,,,
வானில் அதை காணோம்.

Saturday, February 12, 2011

கடவுள் மட்டும் காதலித்திருந்தால்...

கடவுள் மட்டும் காதலித்திருந்தால்...
மரணம் என்பதே உலகில் இருந்திருக்காது.
வறுமையின் வரைப்படமே இருந்துருக்காது.

கடவுள் மட்டும் காதலித்திருந்தால்...
கண்ணகியின் கண்ணீருக்கு ஒரு நல்ல முடிவு கிடைத்திருக்கும்.
புன்னகையே உயிர்களின் தாய்மொழி என்றாகியிருக்கும்,

கடவுள் மட்டும் காதலித்திருந்தால்...
ஓர் இரவுக்கு ஓராயிரம் நிலவுகள் தந்திருப்பான்.
அடிக்கடி புது புது கனவுகளில் வந்திருப்பான்.

கடவுள் மட்டும் காதலித்திருந்தால்...
கவிதைகளுக்கு மண்ணில் பஞ்சம் வர வாய்ப்பே இல்லை.
வைரமுத்துவுக்கும் வாலிக்கும் இனி வேலையே இல்லை.

கடவுள் மட்டும் காதலித்திருந்தால்...
காதல் தோல்வியில் அவன் கலங்க்கலாம்.
கடைசியில் தேவதாசைப் போல தாடி வளர்க்கும் நிலை வரலாம்.

கடவுளுக்கும் ஒரு நாள் காதல் வரும்...
அன்று இந்த காதல் கொண்ட மனிதர்களின் நிலைமை தெரியவரும்.

நாளொன்றுக்கு வாசகம் ஒன்று....

இந்தப் பிறவி நமக்கு நிரந்தரமில்லை...அடுத்தப் பிறவி நமக்கு நிச்சயமில்லை.

அறிமுகம்

திரும்பிப் பார்க்கச் சொல்லும் அந்த முகம்...
திரும்ப திரும்ப பார்க்கச் சொல்லும் அந்த முகம்.

விரும்பிப் பார்க்கச் சொல்லும் அந்த முகம்...
விரும்ப விரும்ப நிரம்பும் அந்த முகம்...

அழகு அரும்பும் அந்த முகம்...
எனக்குள்ளே முதன் முதலாய் அறிமுகம்.

அறிமுகம்

திரும்பிப் பார்க்கச் சொல்லும் அந்த முகம்...
திரும்ப திரும்ப பார்க்கச் சொல்லு அந்த முகம்.
விரும்பிப் பார்க்கச் சொல்லும் அந்த முகம்...
எனது விருப்பத்தின் பெயரிலே எனக்கு அறிமுகம்.
எனது மொத்த விருப்பமும் இனி அதே திருமுகம்.

நடக்கும் நந்தவனம்

நடக்கும் நந்தவனமே...
உன் கால்கள் நடக்க சாலை மரமெல்லாம் மனம் நொந்து போகும்.
கொஞ்சம் பொறு,,,
மேகம் வந்து உன்னை சுமந்து போகும்.

நாளொன்றுக்கு வாசகம் ஒன்று....

மனிதனின் வாழ்க்கை ஒரு முறை தான்...
வாழ்க்கை இழந்தவன் மண்ணுக்கு இரை தான்.

Friday, February 11, 2011

நாளொன்றுக்கு வாசகம் ஒன்று....

வாழ்க்கை வாழத் தெரியாதவன்...வாழ்நாள் கைதி.

வினோதமான வினா

எல்லோரும் உறங்கும் பொழுது...
நான் மட்டும் உறங்கவில்லை.
எல்லோரும் உண்ணும போது...
நான் பசியை உணரவில்லை.
எல்லோரும் மழையை நனைந்த பொழுது...
என்னை மட்டும் மழை நனைக்கவில்லை.
ஏன்..?
ஏன்..?
ஏன்..?
வினோதமான வினா இது,,,
விவரிக்க விடை இல்லை.

உள்ளம்

உள்ளங்கை ரேகை உள்ளத்தை சொல்லுமா...
உள்ளத்தில் உள்ளதை தான் சொல்லுமா.
உள்ளத்தில் உள்ளதை உள்ளபடி சொல்லும் உள்ளம் தான் ஏதம்மா..?

நாளொன்றுக்கு வாசகம் ஒன்று....

அமைதி...
ஆண்டவனின் சன்னதி.

Thursday, February 10, 2011

நாளொன்றுக்கு வாசகம் ஒன்று....

குரங்குக் குட்டிகள் தனது தாயின் மடியில்...
மனிதனோ,,,
குழ்ந்தை பெற்று குப்பைத்தொட்டியில்.

வாடா தோழா...

வாடா தோழா....

வானம் தொட்டு வரலாம்.

வாடா தோழா...

நிலவை மண்ணில் நடலாம்.


வாழ்க்கை அது....

புது வானவில் வண்ணங்களே.

போகும் பாதை...

அது இன்பத்தின் அங்கங்களே.


உன் வாழ்க்கை...

உந்தன் கையிலே.


இன்பங்கள் அங்கும் இங்கும் தேடியே...

இன்றை தொலைத்தவர்கள் கோடியே.

கண்களை கண்ணீரால் மூடியே...

நம் வாழ்க்கை முடிந்தது இப்படியே.


இந்த வாழ்க்கை...

இன்பத்தின் பூந்தோட்டம் தானே.

இந்த பூமி...

சொர்கத்தின் மருபக்கம் தானே.

என்றும் உல்லாசம் தான் வேண்டுமே...

சிறு சந்தோஷங்கள் போதுமே.


நேற்று என்ற வார்த்தை தூரம் போடு...

இன்று மண்ணில் என்ன இருக்கு தேடு...


காற்றும் கடலும் கூட நடக்கும் உன்னோடு

மெதுவாக ஓடும் மேகக் கூட்டங்கள்...

என்னோடு மோதி செல்ல வாருங்கள்.

அழகாக கொட்டும் அந்த அருவிகள்...

அவை தானே அன்பை வார்க்கும் தோழிகள்.


கொஞ்சம் இன்பம்...

கொஞசம் துன்பம்...

இரண்டும் வேண்டும்.

இதை அன்றி...

வேரென்ன இங்கு வேண்டும்.


இந்த பூமி பந்து தான் கோலியா...

அதில் ஆடி பாடுவோம் ஜாலியா.

Sunday, February 6, 2011

பெண்மையும் நீரும்

பெண்மையும் நீரும் ஒன்றாமோ...
தன்மை அறிந்தவன் கிடையாதே.
ஆயிரம் கவிஞர்கள் வந்தாலும்,,,
உண்மை நிலவரம் தெரியலையே


நானா..? நீயா..?

நான்...
நானாக இருந்த போது,,,
நான் என்னையே அறிந்ததில்லை.

நான்...
நீயாக இருக்கு இப்போது,,,
அறிந்து கொண்டேன்...
காதல் என்னையும் விட்டு வைக்கவில்லை.

சொந்தவனம்

நந்தவனமே...
நந்தவனமே...
என் சொந்த வனம் ஆவாயா..?
என் கவிதை சந்தம் வரைக்கும் வந்தவளே,,,

என் சொந்தம் என ஆவாயா..?
என் சிந்தை கூட்டின் சந்தையிலே...
கூவி கூவி விந்தை விளைவித்தது போதும்,,,
மனப் பந்தியில் குடி வருவாயா..

வந்த வழி எந்த வழி..?

கண்கள் வழி...வந்த ஒளி...என்ன ஒளியோ..?
நிலவொளியோ..?
மின்னல் ஒளியோ...?
அந்த ஜீவ ஒளி...

வந்த வழி....

தேடிச் சென்ற எனது விழி,,,

மறந்து போனது அது வந்த வழி.

நிலவுக்கு நிகர்

அவள் விழிகளை திறந்துப் பார்த்தேன்...

அங்கே தாமரை பூக்களின் தோப்பு.

அவள் உதடுகளை உற்றுப் பார்த்தேன்...
தேனீக்களின் குடியிருப்பு.
கூந்தலைக் களைத்துப் பார்த்தேன்...
பாபிலோனின் தோட்ட அமைப்பு.

வானத்து வெண்ணிலவே,,,
உனக்கு என்ன நினைப்பு..?
அவள் உன்னை விடவும் உயர்ந்த படைப்பு.

காலையை உங்களுக்கு அறிமுகப் படுத்துகிறேன்...

அலாரம் பொறுத்தாமலேயே,,,கூவி எழுப்பும் செவல்.
பறவைகளின் பரவச கீச்சொலி.
உடம்பை உதர வைக்கும் குளிர் தென்றல்.
சூரியன் சுகிக்க,,,வானின் திறப்பு விழா.
சாலை எங்கும் பனித்திரை.

இவை அனைத்தையும் இதயத்தோடு அறிமுகப் படித்திக் கொள்ளுங்கள்.
இன்று என்பது நமக்கு இன்பகரமாய் இருக்கும்


நாளொன்றுக்கு வாசகம் ஒன்று....

உலகிலுள்ள வேதனைகளை எல்லாம் சோதித்துப் பார்,,,
காதலின் சாதனை புரியும்
.

உன் இதயம் மறுக்காது

நான் விழுந்தது...
மீண்டும் உன் கரம் பிடித்து எழுந்தது...
உனக்கு தெரியாமல் இருந்திருக்கலாம்.
உன் இதயத்துக்குத் தெரியாமல் இருந்திருக்காது.
நீ மறுத்தாலும்...
உன் இதயம் அதை மறுக்காது.

நாளொன்றுக்கு வாசகம் ஒன்று....

பார்வைகள் மட்டுமே உண்மையின் கோர்வையை சொல்லும்...

புரியும்

புரியும் மனம் புரியும்....
புரியும் போது அது புரியும்.
காதல் என்பது குழப்பத்தின் கோவில்,,,
புரியும் போது மனம் புன்னகை புரியும்.

நான் எப்படி பாட..?

கம்பனை கூட்டி வந்தேன்...
அவள் விழி அழகைப் பாட.
அவனுக்கே வார்த்தை இல்லையே....
நான் எப்படி பாட..?

நாளொன்றுக்கு வாசகம் ஒன்று....

கடமையை செய்ய கெளரவம் பார்க்காதே.

முயலும், ஆமையும்!

மௌனம் சூழ்ந்த ஒரு காடு….

பல் உயிர்களுக்கு அது தான் வீடு.

சில்லென்ற அந்த சூழலோடு,,,

சொல்ல நாங்கள் வந்தோம் கதையோடு.

மெதுவாய் நகரும் ஓர் ஆமை

எத்தூரம் எனினும்,,,

எண்ணி எண்ணி நடக்கும் பொறுமை.

வேகமாய் விரையும் முயலுக்கு

தான் தான் என்ற தற்பெருமை.

அவ்விரு துருவம் சேரும் பொழுதில்,,,

ஓரு புதுமை.


என்னோடு போட்டி போட,,,

இங்கே ஆளிருக்கா..?

ஓட்டுக்குள்ளே பயந்தொளியும் ஆமையே,,,

ஓடி ஜெயிக்க உனக்கு தில் இருக்கா..?

முயலும் சவால் இட

ஆமையும் சம்மதம் தந்தது,,,

சரிசமமாய் போட்டியிட.

வனவாழ் வாசிகள் கூடின,,,

போட்டியை நோட்டம் இட.


நீதிபதியாய் வானரம்...

ஓட்டம் தொடங்கிய நேரம்,,,

மிருகங்களின் ஆரவாரம்.

உட்சாகமாஇ இருவரும்.


முயலோ

எடுத்த எடுப்பில் ஓட்டம்.

நகர்ந்தது ஆமை மட்டும்.

முன்னேறிய முயலுக்கு களைப்பார திட்டம்

ஆமையை கானோமே,,,,

முயலின் எண்ணம் நிறைவேற்றம்.


களைப்பாரப் போன முயலோ

கண் அயர்ந்து போனதென்ன.

கண் விழித்துப் பார்த்த போது,,,

கணவு கானல் நீராய் கலைந்த்தென்ன.


ஆமை முயலை கடந்தது

வெற்றி கோட்டை நுகர்ந்தது.

துறத்தி சென்றும் பயன் இல்லை,,,

மண்னில் முயல் கவிழ்ந்தது.

ஆனவம் அவிழ்ந்தது.

கதையும் முடிந்தது.


கதையை கேட்டோமே

கதையாய் மட்டும் கேட்டோமே

கருத்தை கொஞ்சம் உரித்து பார்ப்போமே.

ஆனவம் ஆகாது நன்பர்களே

அது அழிவுக்கு விட்டிடும் நம்புங்களே.

தற்பெருமை தகாது நன்பர்களே

உண்மை சொன்னால் கேளுங்களே.




இலக்கணக் காதல்

வல்லினம் நீ...
மெல்லினம் நான்...
இடையினாமாய் காதல் வர...
முடங்கிக் கிடக்கிறேன் கோடையிலே.

பெயர் சொல் கண்ணே...
உன் திருவாயால்,,,
பெயர் சொல் கண்ணே...
எனது உயிரும் மெய்யும் புணரும் ,,,
ஓரிடத்தில் நின்னே.

சுட்டேரிக்குது சுட்டெழுத்து...புனிதப் போருக்கு அயத்தமாகுது ஆயுத எழுத்து...
கேள்விக் கணைகளை பாய்ச்சுதே வினா எழுத்து...
இவை தானோ எனது அன்றாட தலை எழுத்து..?

உயர்தினையா...-நான்
அஃறினையா..?
திணை தெரியாத வினைகளை தாங்கி,,,
பினைப்பிடிக்கப் பட்டிருக்கிறேன்.
இவை யாவும்...
காதல் செய்த செய்வினையா..?

பன்மைகள் ஒருமையாக...
வேற்றுமைகள் ஒற்றுமையாக...
இலக்கணக் காதலுக்கு முற்று என்பது இல்லை,,,
செர்த்தேழுதுவோம் நம் பெயரை ஒன்றாக.

நாளொன்றுக்கு வாசகம் ஒன்று....

பெற்றது வாரைக்கும் பெருமிதம் கொள்வோம்.

Thursday, February 3, 2011

கவிஞனாய்...

காலைப்பனியின் கருவறையில்...
கருதரித்தை சூரியன் போல,,,
கவிதையின் கருவறையில்...
புதிதாய் பிறந்தேன் கவிஞனாய்.

Wednesday, February 2, 2011

நாளொன்றுக்கு வாசகம் ஒன்று....

மாசு படியாதே நெஞ்சிலே...
இயேசுநாதரும் குடியிருப்பார்..

கலங்கரை விளக்கம்

காதல் என்பது...
கலங்கரை விளக்கம்.
தனிமையில் கூட புண்ணகை செய்யும் வழக்கம்.
காலம் வரும் போது தான் அது தனது பெருமையை விளக்கும்.

நாளொன்றுக்கு வாசகம் ஒன்று....

எந்நேரமும் புன்னகைக்கும் பெண்ணுக்கு...
ஏந்நகையும் தேவைப்படாது.

Tuesday, February 1, 2011

கண்டேன் காதலை - நான் மொழி அறிந்தேன்


படம்: கண்டேன் காதலை
இசை: வித்யாசாகர்
பாடியவர்: சுரேஷ் வாட்கர்
பாடலாசிரியர்; கவிஞர் யுகபாரதி

நான் மொழி அறிந்தேன் உன் வார்த்தையில்
அன்று நான் வழியறிந்தேன் உன் பாதையில்
நான் என்னை அறிந்தேன் உன் அருகிலே
நான் விசையறிந்தேன் உன் விழியிலே
இன்று நான் வலி அறிந்தேன் உன் பிரிவிலே
(நான் மொழி..)

நல்லதொரு பூவாசம் நான் அறிந்த வேளையில்
நந்தவனம் போன இடம் நான் அறிவேன்
என்னுடைய ஆதாயம் கை சேர்ந்த வேளையில்
வெண்ணிலவு போன இடம் நான் அறியேன்
காற்றைப்போல வீசியவள்
கையை வீசிப் போனதெங்கே
ஊற்றைப் போலப் பேச்யவள்
ஊமையாகிப் போனதெங்கே
வாழ்வை மீட்டுக் கொடுத்தவளே
நீயும் தொலைந்துப் போனதெங்கே
(நான் மொழி..)

கண்ணிமையில் ஓர் ஆசை
ஊஞ்சலிடும் வேளையில்
உண்மைகளை உள்மனது காண்பதில்லை
புன்னகையில் நான் தூங்க
ஆசைப்பட்ட வேளையில்
உன் மடியின் தூங்கும் நிலை ஞாயமில்லை
மேகம் நீங்கிப் போகும் என
நீல வானம் நினைப்பதில்லை
காலம் போடும் வேலிகளை
கால்கள் தாண்டி நடப்பதில்லை
வாழ்ந்துப்போகும் வாழ்க்கையிலே
நமது கையில் ஏதுமில்லை
(நான் மொழி..)




பாடல் விளக்கம்


திரைபடத்தின் சூழலுக்கேற்ப சுதி சேர்க்கப் பட்ட யுகபாரதியின் சோகவரிகள் அவை...
சோகத்திலும் தத்துவங்களை புகுத்தும் திறன் பரட்டுவதற்குரியது. அருமையான இசை தோரணம்.வரிகளை வசியப்படுத்தும் இசை. வித்தியாசாகரின் தனியொரு திறமையின் தோற்றம் இந்தப் பாடல் இசை.

மொழி அறிந்தேன் நீ பேசுவதைப் பார்த்து....
நான் வழி அறிந்தேன் நீ போகும் பாதை பார்த்து...
உன் அருகில் இருக்கும் போது தான் நான் யார் என்பதையே அறிகிறேன்.
எனது விசை உன் விழியில் தான் என்று உணர்ந்தேன்...
இத்தனையும் அறிதேன்,,,
அதோடு சேர்த்து உன் பிரிவின் தாக்கத்தில் வழி என்பது இது தான் என்றறிந்தேன்.


இப்போது தான் பூக்களின் வாசத்தையே உணர ஆரம்பித்தேன்...அதற்குள் பூங்கவையே காணவில்லை எங்கு போனதோ..?
வானம் இப்போதுதான் என் வசம வந்தது...அதற்குள் நிலவை காணவில்லை...எங்கு போனதோ..?
தென்றலாய் வருடி விட்டு...தென்படாதே தூரமாய் சென்று விட்டால்.
சலிக்காமல் பேசிவிட்டு...சத்தமே இன்றி ஒளிந்துவிட்டால்.
என் வாழ்க்கையை டதேடித் தந்து விட்டு...நீ எங்கு பொய் தொலைந்தாய்..?


கண் இமையில் ஒரு கனவு ஊஞ்சலாடுகிறது...அவ்வேளையிலே ஆழ்மனது உண்மை என்ன என்பதை அறிய விரும்புவதில்லை.
உறக்கம் கூட இனி இனிக்கப் போகிறது...இன்னும் உன் மடியை தேடுவது நியாயமில்லை.
மேகம் தன்னை விட்டுப் பிரியும் என வானம் ஒரு போதும் நினைத்ததில்லை...
காலம் நமக்காய் போட்டிருக்கும் வரம்புகளை தாண்டி யாரும் செல்வதில்லை.
இந்த வாழ்க்கையை நிர்ணயம் செய்வது நமது கையில் இல்லை.

நன்றி.

படைப்பு : சுவரன்

இன்னொரு நாள்...

முன்னொரு நாள் முன்னோர் சொன்னார்...
முந்தி வா என்று.
பின்னொரு நாள் பின் தங்கி விட்டோம்...
பந்தியின் கடைசியிள் நாம் இன்று.

இன்னொரு நான் நமக்கு வாய்க்கும்,,,
வானை தொடுவோம் மண்ணை வென்று.

நாளொன்றுக்கு வாசகம் ஒன்று....

தோல்வியை தழுவிக் கொள்ளும் மனம்...
வாழ்வில் அனைவருக்கும் வரணும்.

எனக்கு மாத்திரம்.

என் கண்களில் அகப்பட்ட அழகு சித்திரம்...
இன்னும் அழியாது என் நெஞ்சில் பத்திரம்.
சறுக்கல் என்பதையே சந்தித்திராத எனது சரித்திரம்...
என்னை தோல்வியை தழுவச் செய்தது பெண் எனும் அந்த கதா பாத்திரம்.

அவள்...
எனக்கு மாத்திரம்.

படம்:நிலாவே வா
பாடல் :நீ காற்று நான் மரம்
பாடகர்:ஹரிஹரன் ,கே.எஸ்.சித்ரா
இசை அமைப்பாளர்:வித்யாசாகர்
பாடல் வரிகள்:வைரமுத்து


பாடல் வரிகள்:


பல்லவி :

நீ காற்று நான் மரம் என்ன
சொன்னாலும் தலையாட்டுவேன்


நீ காற்று நான் மரம்...நீ சொல்லும் விதம் நான் செயல்படுவேன்

நீ மழை நான் பூமி எங்கு
விழுந்தாலும் ஏந்திக்கொள்வேன்

மழையாய் நீ விழும் மண்ணை நான்...நீ விழும் இடம் என் கைகளாக இருக்கும்

நீ இரவு நான் விண்மீன் நீயிருக்கும்
வரைதான் நான் இருப்பேன்


விடியும் வரை தான் வின்மீனுக்கு வேலை...நீ இருக்கும் வரை தான் எனக்கு நாளை.



சரணம் 1

நீயலை நான் கரை என்னை
அடித்தாலும் ஏற்றுக்கொள்வேன்

வலி தந்தாலும் கரை போல அதனை தாங்கிக்கொல்வேன்.

நீ உடல் நான் நிழல் நீ விழ
வேண்டாம் நான் விழு
வேன்

உனது தேகம் மண்ணில் விழக்கூடாது...நிழலாய் நான் இருக்கிறேன் விழ.

நீ கிளை நான் இலை உனை
ஒட்டும் வரைக்கும்தான் உயிர் தறிப்பேன்

விழுந்த இல்லை விளையாது...உன்னை பிரிந்த எனது உயிரும் வாழாது.

நீ விழி நான் இமை உன்னை
சேரும்வரைக்கும் நான் துடித்திருப்பேன்

உன்னை சேரும் வரை நான் விழி மூட காத்திருக்கும் இமையை ஆவல் கொள்வேன்.

நீ சுவாசம் நான் தேகம் நான்
உன்னை மட்டும் உயிர்தொட அனுமதிப்பேன்

நீ மட்டுமே என் உயிரின் மீது தொட உரிமை உள்ளவன்...


சரணம் 2

நீ வானம் நான் நீலம் உன்னில்
நானாய்க் கல்ந்திருப்பேன்

வானிடமிருந்து பிரிக்க இயலாத நீளம் போல...உன் உள்ளே சேர்ந்திருப்பேன்.

நீ எண்ணம் நான் வார்த்தை நீ
சொல்லும் பொழுதே வெளிப்படுவேன்

வார்த்தைகள் என்பது எண்ணத்தின் பிரதிபலிப்பு...வார்த்தை வெளிவரும் போது நான் எண்ணமாய் பிரதிபளிப்பேன்.

நீ வெயில் நான் குயில் உன் வருகை
பார்த்துத்தான் நானிசைப்பேன்

வெய்யிலின் போது தான் குயில் கூவும்...ஆகவே உன் வருகையினால் தான் நான் களிப்படைவேன்.

நீ உடை நான் இடை உன்னை
உறங்கும்பொழுதும் நான் உடுத்திருப்பேன்

எத்தருனமும் என் இடை போர்த்தும் உடை போல உன்னை அணிந்திருப்பேன்.

நீ பகல் நான் ஒளி என்றும்
உன்னை மட்டும் சார்ந்தே நானிருப்பே
ன்

பகலையும் வெளிச்சத்தையும் பிரிக்க முடியுமோ..?அது போல உன்னோடு ஒன்றியே இருப்பேன்.


விமர்சனம்

வைரமுத்துவின் வைர வரிகளுக்கு எல்லையே இல்லை என்பதற்கு சான்றாக இந்தப் பாடல் அமைகின்றது. கற்பனையை கடல் அளவு கசியவிட்டிருக்கிறார் கவிஞர்.