ஆழத்தைப் பார்
கவிதை களம்
கவிதைகளின் கருவறை
Monday, April 11, 2011
Tuesday, March 22, 2011
Tuesday, March 15, 2011
வாழ்த்திட வாரீர்

" என் தங்கையின் திருமண அழைப்பிதழுக்காக அட்சரமாக்கிய அழைப்புக் குவியல்கள்"
திருமண நாள் : 04 . 06 . 2011
ஒரு மகன்...
மணமகள் மனம் கவர்ந்த திருமகன்.
ஒரு மகள்...
மணமகன் மனம் கவர்ந்த திருமகள்.
ஒரு நாள்...
சுபமுகூர்த்தம் கூடி வரும் மங்கள நாள்.
ஒரு மேடை...
நவரத்தினங்களால் கூடிய மணமேடை.
ஆதவன் அங்கு...
ஆனந்தமாய் எரியும் அக்கினியாக...
தென்றல் அங்கு...
மந்திரம் ஓதும் புரோகிதராக...
விண்மீன்கள் அங்கு...
மேடை போர்த்திய அலங்கர விளக்குகளாக...
மேகத்தின் இரு கைகள் அங்கு...
மணமக்கள் அமரும் இருக்கைகளாக...
பஞ்சபூதங்கள் – மணமகன் வீட்டார் சார்பாக.
நவகிரகங்கள் – மணமகள் வீட்டார் சார்பாக.
அண்டங்கள் ஆளும் அந்த ஆண்டவனே...
இத்திருமணத்திற்கு சாட்சியாக.
உலகமே ஒன்று திரண்டும் இன்னும் காத்திருக்கிறோம் ஏதற்காக..?
உடனிருக்கும் உறவினர்களே,,,
நட்பு நல்கிய நண்பர்களே,,,
அறிவை அளித்த ஆசான்களே,,,
உங்கள் வருகைக்காக.
வந்து இந்த மணமக்களை மனதார வாழ்த்துவதற்காக.
வாழ்த்திட வாருங்கள்...
விண்ணை விட உயர்ந்தது உங்கள் ஆசிர்வாதங்கள்.
Saturday, March 12, 2011
தசை முழுதும் இசை
ஓர் இன்னிசை இரவு...
அவனும் அவளும்.
இருவராய் இருந்து...இருக்கமாய் இணைந்த இரவு.
அதற்க்கு சாட்சி அந்த நிலவு.
சங்கீதமாய் சங்கமமானது...-மனம்
சந்தித்த இடத்திலேயே சஞ்சலமானது.
குளமாவது,,,
கோத்திரமாவது,,,
காதலுக்கு முன்னே...அனைத்தும் சமமானது.
பல நூறு வையோளின்களின் இசை,,,
சில நூறு குயிலோசை,,,
ஒன்ரினைந்ததே காதலின் தசை.
மெதுவாய் அசை போடச் செய்யும் மனசை.
அவனும் அவளும்.
இருவராய் இருந்து...இருக்கமாய் இணைந்த இரவு.
அதற்க்கு சாட்சி அந்த நிலவு.
சங்கீதமாய் சங்கமமானது...-மனம்
சந்தித்த இடத்திலேயே சஞ்சலமானது.
குளமாவது,,,
கோத்திரமாவது,,,
காதலுக்கு முன்னே...அனைத்தும் சமமானது.
பல நூறு வையோளின்களின் இசை,,,
சில நூறு குயிலோசை,,,
ஒன்ரினைந்ததே காதலின் தசை.
மெதுவாய் அசை போடச் செய்யும் மனசை.
Wednesday, March 9, 2011
ஊரடங்குச் சட்டம்
உதடுகள் திறந்தப் பின்னும்...
மொழிகள் பிரந்தப் பின்னும்...
இன்னும்...
இன்னும்...
நாவில் ஊரடங்குச் சட்டம் முடிந்தபாடில்லையே.
யார் காரணம்..?
உண்மை சொல்ல தெரியல...
பொய்யும் சொல்ல முடியல...
கர்பமாகிப் பொன இந்த சின்ன இதயத்துக்கு,,,
காரணமுன்னு யாரை சொல்ல..?
பொய்யும் சொல்ல முடியல...
கர்பமாகிப் பொன இந்த சின்ன இதயத்துக்கு,,,
காரணமுன்னு யாரை சொல்ல..?
Tuesday, March 8, 2011
காதலின் வழி
விழிகள் எங்கே கானோமடி...
வழியில் அதனை தொலைத்தேனடி.
குழிகள் அங்கே இருப்பினும்,,,
விழுந்து எழுந்து நடந்தேனடி.
Subscribe to:
Posts (Atom)