Sunday, February 13, 2011

காதலர் தினம்

இந்த தினம்...
காதலுக்கு உகந்த தினம்.
காதலர்களுக்கு சொந்தமான தினம்.

இந்த தினம்...
இதயம் பூவாய் விரியும் தினம்.
கால்கள் இறக்கை விரித்து திரியும் தினம்.

இந்த தினம்...
மனசு மனசும் சேர்ந்த தினம்.
ரோஜா பூக்கள் சந்தையில் தீர்ந்த தினம்.

இந்த தினம்...
அன்புக்கு அடிமையான தினம்.
இன்பத்துக்கு உரிமையான தினம்.

அந்த தினம்...
அழகிய தினம்.
அற்புத தினம்.
காதலுக்கு நன்றி சொல்லும் ஒரு புனித தினம்.

அதுவே காதலர் தினம்.
நிலவும் கொண்டாடச் சென்று விட்டது,,,
வானில் அதை காணோம்.

1 comment:

சுவரன் said...

அனைவருக்கும் எனது இனிய காதலர் தின நல்வாழ்த்துக்கள்...