Monday, February 14, 2011

வள்ளுவன்

ஒரு விநோதமான விவசாயி...
காலையில் வயலை உழுவான்.
மாலையில் ஓலையை உழுவான்.
தமிழ் என்று சொல்லிக் கொண்டே எழுவான்.

பிழைப்புக்காக வேலை.
பிறப்புக்காக ஓலை.
உழைப்புக்காக ஊதியம்.
தமிழுக்காக வைத்தியம்

அவனை பேசாத புலவன் இல்லை...
அவனை எழுதாத அறிஞன் இல்லை...
அவனை அறியாத தமிழன் இல்லை...
தமிழுக்கு அவனே தலைச்சம் பிள்ளை.

அன்று அவன் கண்டது...
இன்று அறிவியலும் தோற்றது.
மூன்று அவன் கண்டது...
முப்பாலாய் சுவைக்குது.
கோடி கொடுத்தாலும் ஈடிலா அவன் படைப்பு,,,
அனைத்துலகமும் அண்ணார்ந்து பார்க்குது.

அவன் தந்துவிட்டுப் போனது,,,
அகரங்கள் அல்ல...
மனித குலத்து ஆகாரம்.
அவன் செதுக்கி வைத்துப் போனது,,,
கல்லால் இழைத்த காவியம் அல்ல...
சொல்லால் செதுக்கப் பட்ட ஓவியம்

இரண்டடி கவிஞன்...-அவன்
முன்னோர்களுக்கும் முன்னோடி.
அறிஞனுக்கும் புலவனுக்கும் மேலே ஒரு படி.
தமிழ் தாளம் போடும் அவன் சொற்படி.

கருத்தாழமிக்க கருமி...-அவன்
படைப்புகள் இலக்கியம் மட்டும் அல்ல.
வாழ்வியல் வாக்கியம்.
வெட்டிக்கு எழுதிய வாசகம் அல்ல...
பொக்கிஷம்..

No comments: