Sunday, February 20, 2011

தமிழ் மொழி நமது தவ மொழி

பெற்றத் தாய் போல் இல்லையா...-உன்
தாய் மொழி.
உனது உதடுகள் மீது உரிமை கொள்ள,,,
அதற்கு வாய்ப்பளி.
ஓர் உன்னத மொழி...
அது தமிழ் மொழி.
தமிழ் பேசும் தமிழன் தான்,,,
இந்த உலகில் அதிர்ஷ்டசாலி.


உனக்காய்...

ஒவ்வொரு நொடியும்...
உன் பெயர் சொல்லி இதயம் துடிக்குதடி.-அந்த
ஒவ்வொரு துடிப்பும்,,,
எனக்காய் அல்ல...உனக்காய் துடிக்குதடி.

பாடு போருளானவள்

எனது பேனா முனை முதல் முறை தலை குனிந்தது...
அவளது அழகான பெயரை எழுதத் தான்.

எனது கண்கள்முதல் முறை பார்வை இழந்தது...
அவளது நிழலில ஒதுங்கிய போது தான்.

எனது கால்கள் முதல் முறை வேர் கொண்டது...
அவளது இருப்பிடம் கடந்த போது தான்.

எனது இருதயம் முதல் முறை துடிக்க மறந்தது...
அவளது திருமுகம் கண்ட போது தான்.

எனது நாட்கள் முதல் முறை புன்னகையில் பூ பூத்தது...
அவளது அருகில் நிற்கும் போது தான்.

எனது கவிதைகள் முதல் முறை கால் முளைத்து நடந்தது...
அவளது பெயரே அதற்கு பாடு பொருள் ஆன போது தான்.

Saturday, February 19, 2011

நாளொன்றுக்கு வாசகம் ஒன்று....

வியர்வை உழைப்பு பிழைப்புக்கு மட்டுமே...
செழிப்புக்கு கிடையாது

எப்போது ஒருவன்,,,

எப்போது ஒருவன்,,,
தான் அடிமை என்பதை உணர்கிறானோ...
அப்போது அவன் முதலாளி ஆகிறான்.

எப்போது ஒருவன்,,,
விடியலை சந்திக்கிரானோ...
அப்போது அவன் உறக்கம் தெளிகிறான்.

எப்போது ஒருவன்,,,
கண்ணீர் விடுகிறானோ...
அப்போது அவன் தன் தப்பை உணர்கிறான்.

எப்போது ஒருவன்,,,
எப்போது ஒருவன் வாய் விட்டு சிரிக்கிறானோ...
அப்போது அவன் வாழ்க்கையில் அர்த்தம் அறிகிறான்.

எப்போது ஒருவன்,,,
நிமிர்ந்து பார்க்கிறானோ...
அப்போது அவன் உயர்வதர்க்கு தயாராகிறான்.

எப்போது ஒருவன்,,,
பொதுநலம் கருதுகிறானோ...
அப்போது அவன் தலைவன் ஆகிறான்.

எப்போது ஒருவன்,,,
தான் வாழ்வது மிருக வாழ்க்கை என்று நினைக்கிறானோ...
அப்போது அவன் மனிதன் ஆகிறான்.

Friday, February 18, 2011

எது நாகரீகம்..?

எது நாகரீகம்..?
புதுமையா...
இல்லை,,,
வாழ்வியல் கூறுகளின் வறுமையா..?
இது என்ன பெருமையா..?
மழைப் பெய்தாலும் மருத்துப் போய் நிற்பதற்கு,,,
நாம் என்ன எருமையா..?

கைக்குட்டை என்பது நாகரீக உடையாம்,,,
நம் இனப் பெண்களுக்கு.
மேல் சட்டை அணிந்தால் போதும் என்ற நாகரீகம...
யார் கற்று கொடுத்தார் நமக்கு..?
அழகு என்பது ஆடை குறைப்பில் இல்லை.
வனப்பு தொடை காண்பிப்பில் இல்லை.
அத்தனையும் நம் அடக்கத்தில் இருக்கு.

மஞ்சள் பூச மணிக்கணக்காகுமா..?
பெண்மைக்கு அழகு அதை விட ஏதம்மா...?
நெற்றியில் திலகம் இட்டால் அது பாரமா..?


பூமுடித்தால் மாது...அவளுக்கு நிகர் எது..?
இன்று,,,
மங்கை கூந்தல் மலர்களை மறந்தது.
தலைவிரி கோலமாய் விரிந்தது.
இப்படியே போனால்,,,
பேய்களுக்கும் பெண்களுக்கும் வேறுபாட்டினை எப்படி தேடுவது..?

சேலையில் எதற்கு சிக்கனம்..?
கண்டவன் பார்க்க ஏனோ,,,
சன்னல் வைக்கணும்..?
உடலை மறைக்க தானே உடைகள்...
பெண்களே,,,
கொஞ்சம் யோசிக்கணும்.

நாகரீகம் என்ற பெயரில் ஆபாச நாடகம் வேண்டாம்.
அயல் நாட்டின் மோகம் அனுசரிக்க வேண்டாம்.
காலம் மாறட்டும்...
கலாச்சாரம் மாற வேண்டாம்...
எக்காலமும் ஏற்கக் கூடியது தான் எங்கள் கலாச்சாரம்.
அது தான் நம்மை அடையாளம் காண்பிக்கும் ஆதாரம்.

அவளுக்கு மட்டுமே...

போனால் இதயம் திரும்பாது...
வேறொரு இதயம் பொருந்தாது.
அவளை தவிர இந்த இதயம்,,,
வேறு யாரையும் விரும்பாது.