Tuesday, February 1, 2011


படம்:நிலாவே வா
பாடல் :நீ காற்று நான் மரம்
பாடகர்:ஹரிஹரன் ,கே.எஸ்.சித்ரா
இசை அமைப்பாளர்:வித்யாசாகர்
பாடல் வரிகள்:வைரமுத்து


பாடல் வரிகள்:


பல்லவி :

நீ காற்று நான் மரம் என்ன
சொன்னாலும் தலையாட்டுவேன்


நீ காற்று நான் மரம்...நீ சொல்லும் விதம் நான் செயல்படுவேன்

நீ மழை நான் பூமி எங்கு
விழுந்தாலும் ஏந்திக்கொள்வேன்

மழையாய் நீ விழும் மண்ணை நான்...நீ விழும் இடம் என் கைகளாக இருக்கும்

நீ இரவு நான் விண்மீன் நீயிருக்கும்
வரைதான் நான் இருப்பேன்


விடியும் வரை தான் வின்மீனுக்கு வேலை...நீ இருக்கும் வரை தான் எனக்கு நாளை.



சரணம் 1

நீயலை நான் கரை என்னை
அடித்தாலும் ஏற்றுக்கொள்வேன்

வலி தந்தாலும் கரை போல அதனை தாங்கிக்கொல்வேன்.

நீ உடல் நான் நிழல் நீ விழ
வேண்டாம் நான் விழு
வேன்

உனது தேகம் மண்ணில் விழக்கூடாது...நிழலாய் நான் இருக்கிறேன் விழ.

நீ கிளை நான் இலை உனை
ஒட்டும் வரைக்கும்தான் உயிர் தறிப்பேன்

விழுந்த இல்லை விளையாது...உன்னை பிரிந்த எனது உயிரும் வாழாது.

நீ விழி நான் இமை உன்னை
சேரும்வரைக்கும் நான் துடித்திருப்பேன்

உன்னை சேரும் வரை நான் விழி மூட காத்திருக்கும் இமையை ஆவல் கொள்வேன்.

நீ சுவாசம் நான் தேகம் நான்
உன்னை மட்டும் உயிர்தொட அனுமதிப்பேன்

நீ மட்டுமே என் உயிரின் மீது தொட உரிமை உள்ளவன்...


சரணம் 2

நீ வானம் நான் நீலம் உன்னில்
நானாய்க் கல்ந்திருப்பேன்

வானிடமிருந்து பிரிக்க இயலாத நீளம் போல...உன் உள்ளே சேர்ந்திருப்பேன்.

நீ எண்ணம் நான் வார்த்தை நீ
சொல்லும் பொழுதே வெளிப்படுவேன்

வார்த்தைகள் என்பது எண்ணத்தின் பிரதிபலிப்பு...வார்த்தை வெளிவரும் போது நான் எண்ணமாய் பிரதிபளிப்பேன்.

நீ வெயில் நான் குயில் உன் வருகை
பார்த்துத்தான் நானிசைப்பேன்

வெய்யிலின் போது தான் குயில் கூவும்...ஆகவே உன் வருகையினால் தான் நான் களிப்படைவேன்.

நீ உடை நான் இடை உன்னை
உறங்கும்பொழுதும் நான் உடுத்திருப்பேன்

எத்தருனமும் என் இடை போர்த்தும் உடை போல உன்னை அணிந்திருப்பேன்.

நீ பகல் நான் ஒளி என்றும்
உன்னை மட்டும் சார்ந்தே நானிருப்பே
ன்

பகலையும் வெளிச்சத்தையும் பிரிக்க முடியுமோ..?அது போல உன்னோடு ஒன்றியே இருப்பேன்.


விமர்சனம்

வைரமுத்துவின் வைர வரிகளுக்கு எல்லையே இல்லை என்பதற்கு சான்றாக இந்தப் பாடல் அமைகின்றது. கற்பனையை கடல் அளவு கசியவிட்டிருக்கிறார் கவிஞர்.

No comments: