Tuesday, February 1, 2011

கண்டேன் காதலை - நான் மொழி அறிந்தேன்


படம்: கண்டேன் காதலை
இசை: வித்யாசாகர்
பாடியவர்: சுரேஷ் வாட்கர்
பாடலாசிரியர்; கவிஞர் யுகபாரதி

நான் மொழி அறிந்தேன் உன் வார்த்தையில்
அன்று நான் வழியறிந்தேன் உன் பாதையில்
நான் என்னை அறிந்தேன் உன் அருகிலே
நான் விசையறிந்தேன் உன் விழியிலே
இன்று நான் வலி அறிந்தேன் உன் பிரிவிலே
(நான் மொழி..)

நல்லதொரு பூவாசம் நான் அறிந்த வேளையில்
நந்தவனம் போன இடம் நான் அறிவேன்
என்னுடைய ஆதாயம் கை சேர்ந்த வேளையில்
வெண்ணிலவு போன இடம் நான் அறியேன்
காற்றைப்போல வீசியவள்
கையை வீசிப் போனதெங்கே
ஊற்றைப் போலப் பேச்யவள்
ஊமையாகிப் போனதெங்கே
வாழ்வை மீட்டுக் கொடுத்தவளே
நீயும் தொலைந்துப் போனதெங்கே
(நான் மொழி..)

கண்ணிமையில் ஓர் ஆசை
ஊஞ்சலிடும் வேளையில்
உண்மைகளை உள்மனது காண்பதில்லை
புன்னகையில் நான் தூங்க
ஆசைப்பட்ட வேளையில்
உன் மடியின் தூங்கும் நிலை ஞாயமில்லை
மேகம் நீங்கிப் போகும் என
நீல வானம் நினைப்பதில்லை
காலம் போடும் வேலிகளை
கால்கள் தாண்டி நடப்பதில்லை
வாழ்ந்துப்போகும் வாழ்க்கையிலே
நமது கையில் ஏதுமில்லை
(நான் மொழி..)




பாடல் விளக்கம்


திரைபடத்தின் சூழலுக்கேற்ப சுதி சேர்க்கப் பட்ட யுகபாரதியின் சோகவரிகள் அவை...
சோகத்திலும் தத்துவங்களை புகுத்தும் திறன் பரட்டுவதற்குரியது. அருமையான இசை தோரணம்.வரிகளை வசியப்படுத்தும் இசை. வித்தியாசாகரின் தனியொரு திறமையின் தோற்றம் இந்தப் பாடல் இசை.

மொழி அறிந்தேன் நீ பேசுவதைப் பார்த்து....
நான் வழி அறிந்தேன் நீ போகும் பாதை பார்த்து...
உன் அருகில் இருக்கும் போது தான் நான் யார் என்பதையே அறிகிறேன்.
எனது விசை உன் விழியில் தான் என்று உணர்ந்தேன்...
இத்தனையும் அறிதேன்,,,
அதோடு சேர்த்து உன் பிரிவின் தாக்கத்தில் வழி என்பது இது தான் என்றறிந்தேன்.


இப்போது தான் பூக்களின் வாசத்தையே உணர ஆரம்பித்தேன்...அதற்குள் பூங்கவையே காணவில்லை எங்கு போனதோ..?
வானம் இப்போதுதான் என் வசம வந்தது...அதற்குள் நிலவை காணவில்லை...எங்கு போனதோ..?
தென்றலாய் வருடி விட்டு...தென்படாதே தூரமாய் சென்று விட்டால்.
சலிக்காமல் பேசிவிட்டு...சத்தமே இன்றி ஒளிந்துவிட்டால்.
என் வாழ்க்கையை டதேடித் தந்து விட்டு...நீ எங்கு பொய் தொலைந்தாய்..?


கண் இமையில் ஒரு கனவு ஊஞ்சலாடுகிறது...அவ்வேளையிலே ஆழ்மனது உண்மை என்ன என்பதை அறிய விரும்புவதில்லை.
உறக்கம் கூட இனி இனிக்கப் போகிறது...இன்னும் உன் மடியை தேடுவது நியாயமில்லை.
மேகம் தன்னை விட்டுப் பிரியும் என வானம் ஒரு போதும் நினைத்ததில்லை...
காலம் நமக்காய் போட்டிருக்கும் வரம்புகளை தாண்டி யாரும் செல்வதில்லை.
இந்த வாழ்க்கையை நிர்ணயம் செய்வது நமது கையில் இல்லை.

நன்றி.

படைப்பு : சுவரன்

No comments: