Wednesday, April 15, 2009

கவிதைகள் வரைகிறேன் நூறு...

கவிதைகள் வரைகிறேன் நூறு...
பொய்களை அதிலே பாரு.
தமிழோடு போராடுவதால்,,,
எனக்கு கவிஞன் என்று பேரு.

சிந்தனைக் கடலை அலசி ஆராய்ந்து...
தமிழ் முத்துக்களை சேர்த்து குவித்து...
சரம் சரமாய் கோர்த்ததில்,,,
சேர்ந்தது சந்தங்க்கள் சிந்தும் பூங்கொத்து.
என் வேலை பாடுகள் ஒவ்வொன்றும் எனக்கு கிடைத்த பெரிய சொத்து.

பொழுதுகள் விடியுமொ இல்லயோ...
என் கற்பனை மேடையில்...
கவிதைகள் அரங்கேர தவராது.
ஊலக கஜானா வற்றி போனாலும்,,,என் கற்பனை கஜானா வற்றி போகும் சூல்நிலை வாராது.
கவிதை பசி என்றுமெ எனக்கு தீராது.

No comments: