Wednesday, April 15, 2009

கடவுள் குழந்தைகள்



புதிதாய் பிறந்த மழலைகள் நாங்கள்...
வேரின்றி முளைத்த பயிர்கள் நாங்கள்...
தாய் தந்தை பாசம் அறியாத பேதைகள் நாங்கள்...
சொல்லுங்கள்...
சொல்லுங்கள்...
எதிரியா நாங்கள்..?

பழிச் சொல் தாங்கும் பாறைகள் நாங்கள்...
உறவின்றி வாழும் உயிர்கள் நாங்கள்...
நீதிக் கூண்டில் நிறுத்தப்பட்ட குற்றவாளிகள் நாங்கள்...
தாருங்கள்...
தாருங்கள்...
முகவரி தாருங்கள்.

அப்பா யாரு தெரியவில்லை...
அம்மா பெயரும் அறியவில்லை...
எங்கள் வேதனை யாருக்குமே புரிவதில்லை.
என் தாய்க்கு ஏனோ என்னை பிடிக்கவில்லை..?
கண்ணீர் விட்டு அழுகுது இந்த பிஞ்சு முள்ளை.

பெற்றேடுத்தால் போதுமா..?
பெற்ற கடன் தீறுமா..?
என்னை பெற்ற தாயவள்...
எங்கே நீ சொல்லம்மா.
காத்திருந்தும் பயனில்லை,,,
நான் செஞ்ச பாவமா.

தாய் பால் ருசித்ததில்லை...
உணர்ச்சிகள் இல்லா கொடியவனா..?
தந்தை முகம் கண்டதில்லை...
கண்கள் இருந்தும் குருடனா..?

சுற்றம் சொன்ன அனாதை பட்டம்...
அதுவே எனக்கு பெயராச்சு.
அலையாடினேன்...
ஆதாரம் தெடினேன்...
எமாற்றமே எனக்கு வரமாச்சு.

என்னை பெத்த மகராசி...
எனக்கும் இல்லை முகராசி.
அன்பை அனுபவிக்காத ஆதிவாசி...
இந்த சமுதாயத்தை பொருத்தவரை நான் வெறும் தூசி.

No comments: