Friday, April 17, 2009

எல்லா புகழும் உனக்கே.




(இசை புயல் a.r.ரஹ்மன் ஆஸ்கார் விருதுகள் வாங்கிய பெருமையில் ஒரு தமிழன் என்ற முறையில் நான் வாழ்த்த விளைந்த வரிகள்)

அண்டமே அசந்து பார்க்கும் 'ஆஸ்கர் அரசனே'...
ஆஸ்காரயே அசர வைத்த உன்னை,,,
ஆஸ்கர் அரசன் என்று அழைக்காமல்...
வேறு எப்படி அழைப்பது?

இசைக் கலைஞனே,,,
நீ தொட்டது தகரம் அல்ல...
சிகரம்.
அதுவும் ஒன்று அல்ல,,,
இரண்டை சுமந்து நின்றது உனது இரு கரம்.
நீ உண்மையில் விருதுக்ள் காய்க்கும் விசித்திர மரம்.

தென்றலாக தவழ்ந்து இன்று புயலென எழுந்து நிற்கும் இசைப் புயலே...
உன் திறமைக்கு இன்று தான் பெருமை சேர்க்கப்பட்டிருக்கிறது.
இல்லை இல்லை...
உன் திறமை இன்று தான் திரை வானில் திரை போட்டு காண்பிக்கப்பட்டிருக்கிறது.

ரோஜாவில் தொடங்கி இன்று வரைக்கும் ஓர் இசை ராஜ்ஜியத்தை ஆண்டுக் கொண்டிருப்பவனே...
இன்று இந்த உலக மண்ணிலே உனக்காக ஒரு சரித்திரமே எழுதப்பட்டிருக்கிறது.
இல்லை இல்லை...
சரித்திரமே உன்னை தன் பதிவேட்டில் எழுதிக் கொண்டது.

உலக அரங்கில் நீ விருதுகள் வாங்கினாய்...
நாங்கள் எல்லாம் உன்னால் பெருமை கொண்டோம்.
அதே அரங்கத்தில் நீ தமிழில் முழங்கினாய்...
தமிழே பெருமை கொண்டது.

இசைக்கு புகழ் என்று மற்றொரு பொருளும் உண்டு...
அந்த புகழுக்கே புகழ் சேர்த்த உன்னை...
இசை தமிழில் குளிப்பாட்ட காத்திருக்கிறது உலகமே திரண்டு.

இவ்வளவு பெருமையை பெற்று விட்டு...
எவ்வளவு பொறுமை உனக்கு.
உனது திறமைக்கு,,,
போதாது இந்த ஒரு விருதளிப்பு.

ஆங்கில நாளிதழ்களும்,
வார இதழ்களும்,
விருப்பப்படி எழுதின...
நீ 'இந்தி' திரை இசை உலகைச் சார்ந்தவன் என்று.
சவுக்கடி கொடுத்தாய் அந்த ஊடகங்களுக்கு,,,
உன்னை வளர்த்தது தமிழ் திரை உலகம் என்று...
அந்த மேடையில் நின்று.

ஆஸ்கார் தமிழனே,,,
நீ சொன்னது ஒரே ஒரு வரியாக இருக்கலாம்...
ஆனால் அந்த ஒரு வரி தான் இந்த உலக தமிழர்களுக்கு முகவரி.

இசை இளவரசனே...
நீ நடந்து வரும் பாதை எங்கிலும் முரசு கொட்டும்.
கலைவானியே கைப்பட எழுதிய வாழ்த்துக் கடிதம் உன் வீட்டு கதவை தட்டும்.
இந்த நூற்றாண்டு அல்ல...
இன்னும் பல நூற்றாண்டுகள் உன்னை பற்றி தான் தமிழ் உள்ளங்களின் இதழ்கள் முணுமுணுக்கும்.

No comments: