Friday, April 17, 2009

"மானிடன் கையில் கிடைத்த உலகம் போல"...




"குரங்கு கையில் கிடைத்தபூ மாலை போல"

இது பழய உவமை.
"
மானிடன் கையில் கிடைத்த உலகம் போல"...
இது புதுமை.

உலகம்,,,
அழகான உருண்டை வீடு...
அதிலே எத்தனை எத்தனை கூடு.
இறைவன் இரவல் தந்த இருப்பிடம் அது.
அதனை அலங்கரிப்பதும்...
அதன் அழகை பறிப்பதும்...
மானிடா உன் பாடு.

அதன் ஒவ்வொரு சீற்றத்துக்கும் நீ தான் தர வேண்டும் இழப்பீடு.
வானம் என்னும் வெள்ளி தகடு...
பூமி பந்துக்கு அதுவே முக்காடு.
அது அனுமதி தந்தால்,,,
நீ ஆனந்த நீராடு.
அந்த மேக கருவறையும் இன்று கதி கலங்கி போய் நிற்கிறது கண்ணீரோடு.

செயற்க்கையை உருவாக்கினாய்...
உன் சௌகர்யத்துக்கு.
இயற்க்கையை அதற்கு இறையாக்கினாய்...

உன் சந்தோஷத்துக்கு.
நாளை இந்த உலக வழக்கை கொஞ்சமாவது நினைத்து பார்த்தாயா..?
வினை செய்தவனே,,,
பலன் வந்து சேறும் உனக்கு.

உயர கட்டிடன்கள் உயர்த்தினாய்...
காடுகள் பலியானது.
காற்றின் உஷ்ன தன்மை உயர்ந்தது.
சொகுசாக செல்ல வாகனங்க்கள் உற்பத்தி செய்தாய்...
அது புகையை துப்பியது.
காற்றோ விஷ வாயுவை கக்கியது.

வானத்தில் ஒரு வாசல்...
"
ஓசொன்படலத்தின் விரிசல்.
யார் போட்டது..?
இயற்க்கையின் விதியா..?

இல்லை,,,
மனிதனின் சதியா..?

சுனாமி...
பூகம்பம்...
சூராவளி...
உயிர்களை பலி கேட்டது.
இயற்க்கையின் சதியா..?

மனிதனின் கதியா..?

சுயநலம் நமக்கு வளம் இல்லை மானிடா...
நீ  இயற்க்கை அழிக்க இங்கே மரண ஓலம் அதிகரிக்கும்பாரடா.

நீ பிறந்த மண்ணை நீ மதிக்கா விட்டால்
மானிடா...
இயற்க்கையும் நம்மை பழிக்கும்...

இயற்க்கையும் நமது தோழன் தான் என்று புது உறவு கொடு,,,

இயற்க்கை உன்னை கட்டி அனைக்கும்.

உலகத்துக்கு நன்மை பயக்கும்.

No comments: