Friday, April 17, 2009

மழலை லீலைகள்



முடிந்தவை எல்லாம் வாழ்க்கை குறிப்பில் சரித்திரம் ஆகுமே...

கல் வெட்டுகள் போலே.
கடந்தவை எல்லாம் பத்திரமாக இதய பதிவேட்டில் அடங்குமே...
இசைத் தட்டு போலே.
மறையாது...
ஆழியாது...
பதிந்து விட்ட நினைவலைகள்,,,
என்றாவது ஒரு நொடி இலேசாக இறக்கை விரித்து விட்டுப் போகும்...
சிந்தையிலே.

சில நேரம் சிரிக்கத் தோன்றும்...
சில நேரம் அழுதிட தோன்றும்...
அந்த பருவ கால ஞாபகங்கள் நம்மை நினைக்கச் சொல்லிக் கொண்டே இருக்கும்என்றும்.

பேசிய மழலையின் அர்த்தம் புரியாது...
ஆடிய ஆட்டத்தின் முடிவு அறியாது...
கண்ட காட்சிகளின் சாட்சி தெரியாது...
இந்த உணரா பருவம் இல்லையென்றால்,,,
மனித வாழ்க்கை நிறையாது.

ஏன் வந்தோம்..?
எதற்க்கு வந்தொம்..?
என்ற வினாவையும் விதைக்காத,,,
பதிலையும் புதைக்காத பருவம்...
ஒரு விசித்திரமான விளையாட்டு மைதானம்.

கள்ளம் இல்லா வெள்ளை மனம்...
கபடம் இல்லா பிள்ளை மனம்...
எங்கு வாங்கினோம்..?
குழந்தை பருவம் என்பது,,,
மகிழ்ச்சி மொட்டுகள் மட்டுமே பூக்கும் பூங்காவனம்.

கவலைகள் இல்லை...
கலக்கம் இல்லை...
கனம் அறிந்த கண்ணீருக்கு அவசியம் இல்லை.
எதிர்பார்ப்புகள் இல்லை...
எதிர்ப்புகள் இல்லை...
எதிரே நிற்பது எதுவும் எதிரிகள் இல்லை.

பறந்தாடிய பருவம்...
பருவ காற்றின் சூழ்ச்சியால் பறந்தோடிய மாயம்.
நெஞ்சை விட்டு மறந்தோடுமா..?
இது தான் வாழ்க்கை...
இது தான் சொர்கம்...
அது தான் மீண்டும் திரும்பி வருமா..?
காலம் தான் எனக்கு அந்த பழைய வாழ்க்கயை திருப்பி தருமா..?

No comments: