
படித்தவன் எழுதுகிறேன்...
பொங்கி வரும் அவள் செந்தமிழ் இதழ்களைப் படித்தவன்,,,
இன்று கவிதை எழுதுகிறேன்.
வரைந்தவன் இரசிக்கிறேன்...
கற்பனையில் ஒரு பிரம்மாண்ட ஓவியத்தை வரைந்தவன்,,,
அதே ஓவியம் என் முன்னாடி நின்ற போது கண் அசைக்காமல் இரசிக்கிறேன்.
பார்த்தவன் வேர்க்கிறேன்...
இது வரை கண்டிராத அவள் அழகை பார்த்தவன்,,,
விழிகள் வேர்க்கிறேன்.
மறந்தவன் நினைக்கிறேன்...
மண் மீது நான் வாழ்ந்ததையே மறந்தவன்,,,
அவள் என்னுள் வாழ்ந்து கொண்டிருப்பதை மட்டும் அடிக்கடி நினைக்கிறேன்.
இறந்தவன் பிறக்கிறேன்...
அவளது முதல் பார்வையில் மூச்சு திணறி போய் இயந்தவன்,,,
மறுபடி ஒரு பார்வை பார்த்தால்...
மீண்டும் பிறக்கிறேன்.
காதலித்தவன் பேதலிக்கிறேன்...
அவள் முகவரி அறியாமல் அவளை காதலித்தவன்,,,
என் முகவரி தெரியாமல் இன்று பேதலிக்கிறேன்.
No comments:
Post a Comment