Friday, April 17, 2009

கண்ணீர் மடல்





இதய வாணி,
காதல் கறுவரை,
குடல் சந்து,
உயிர் முற்றம்.
காதல் தேசம்.

அன்புள்ள காதலி,

வாசகன் புனைந்தது...
இதயத் துடிப்பில் விளைந்தது...
கன்கள் அழுத போது கண்ணீரால் பதிந்தது.

நான் பேசவில்லை,,,
என் இதயம் பேசுகிறது.

வார்த்தை இருந்திருந்தால் வாய்மொழியில் சொல்லியிருப்பேன்...
கண்ணீர் தான் வருதே,,,
அதான் கடிதம் போட்டேன்.

எழுதிய நோக்கம் சொல்ல நாவுக்கு நாதியில்லை...
சொல்லாமல் விட்டு விட்டால்,,,
என் நோவுக்கு முற்றுப்புள்ளி இல்லை.

நெருங்கி வந்த நெஞ்சமே...
என் நெஞ்சை மறந்து போக காரணம் என்னடி..? 
என் இதயம் நெய்த பூங்கொடி...
உனக்கு இதயம் இருக்கா சொல்லடி.

என் இதயத்தை வாடகைக்கா வைத்திருந்தேன் வாச மல்லிப் பூவே..?
வந்த வேகத்திலேயே பிரிவது தான் உன் வழக்கமோ.
இது தான் பெண்மையின் பழக்கமோ..?
இதை அறிந்த பின்னும் என் இருதயம் தான் துடிக்குமோ..?

காதலை கண்களில் புதைத்து விட்டு...
காலியான நெஞ்சை விதைத்து விட்டு...
காற்று வாங்க வந்தேன் என்றால் கண்கள் தூங்குமா.
பெண்ணே நீ செய்வது தான் நியாயமா.
இறகில்லாமல் பறந்த இளமனசை,,,
இரக்கமின்றி அறுத்து போட்டவளே...
சொல்லு...
உன் மனதை தொட்டுச் சொல்லு...
என்னை மறக்க முடியுமா..?

மோசம் செய்த உன் மேல் ஒரு போதும் நேசம் குறைந்ததில்லை.
கண்ணீர் தந்தாலும்...
கண்மணி,,,
என் காதலுக்கு நீ பகையில்லை.

ஒன்று மட்டும் நீ தெரிந்துகொள் காதலியே,,,

இது வெட்டிக்கு எழுதிய வாசகம் அல்ல கண்ணே...
மரண சாசனம்.

இந்த கடிதம் உன்னை சேரும் முன்னே,,,
என் மறைவை சொல்ல ஓலை வரும்.
வாய்க்கரிசி போட வசதியிருந்தால்...
வந்து விட்டு போ.

இப்படிக்கு,,,
கல்லறைக்கு காத்திருக்கும் உன் கடந்த கால காதலன்.

No comments: