
விரைவு இரயிலில் விரைவாக ஏறி அமர்ந்தேன்...
துணி பையை இரும்பு தூணோடு அமர்த்தி விட்டு சாய்ந்தேன்.
குழந்தையின் அழுகை சத்தம் ஒரு புரம்...
இரயில் நகரும் சத்தம் மறு புரம்...
கலைப்பின் கருணையால் அந்த சத்தத்திலும் கண் அசந்து விட்டேன்.
தூக்கம் கலைந்து எழுந்து சற்று நிமிர்ந்தேன்...
ஒரு தாமரை தோட்டமே என் முன் அமர்ந்திருந்ததாய் உணர்ந்தேன்.
ஸ்தம்பித்துப் போனது என் இதய ஆலை.
தப்பிக்க முயன்றது கண்கள் அந்த வேளை...
பெண்களில் எந்த வகை பெண் அவளோ..?
பூவின் கருவில் பிறந்திருப்பாளோ..?
வானவில் பரம்பரையிலிருந்து வந்திருப்பாலோ..?
பிரம்மனும் கடும் பயிற்சி எடுத்து வடித்த பிரம்மோவியமோ..?
எந்த ஸ்டொபில் ஏறிய பறவையோ..?
என் இதயத்தை அந்த இரயிலின் வேகத்தை விட பல மடங்கு ஓட வைக்கிறாள்.
கண்களில் ஒரு வெளிச்சம்...
வைட்டமின் 'D' சூரியனிடமிருந்து கிடக்கும் என்று படித்ததாய் ஞாபகம்.
இன்னும் எத்தனை எத்தனை வைட்டமின்கள் மிச்சம் இருக்கிறதோ,,,
அத்தனையும் அந்த நொடி கண்களில் உதயம்.
அவள் தோழியோடு அளவளாவிய போது அரங்கேறியே அற்புத வார்த்தைகள்...
காதுகளுக்கு இனிய இசை கச்சேரிகள்.
அந்த சர்க்கரை சொற்களுக்கு இல்லை ஈடானகவிதை வரிகள்.
என் ஆயுலின் நாழிகைகள்
அவளை பார்த்துக் கொண்டே காலங்கள் முடிந்திட கூடாதா.
அக்கரையில் அவள் இருக்க அக்கரையாய் பார்க்கிறது இக்கரையில் என் கண்கள்.
எக்கரையில் இறங்க போகிறாளோ,,,
மனம் அக்கரையாய் கேட்கிறது.
அவள் இறங்கக் கூடிய ஸ்டோப் வந்தது...
இறங்கினாள்,,,
என் இதயமும் உடன் இறங்கியது.
அன்று முதல் நான் அதை தேடுகிறேன் கிடைக்க மாட்டேங்குது.
No comments:
Post a Comment